Aran Sei

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்துப் போராட தயார் – அசாதுதீன் ஓவைசி

credits : new indian express

”தேசிய மக்கள்தொகை பதிவேடுதான் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முதல் படி” என நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான (என்பிஆர்) அட்டவணையும் கேள்வித்தாளும் இறுதி செய்யப்பட்டு வருவதாக இந்திய அரசின் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2020 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக இந்தத் திட்டம் கால வரையின்றித் தள்ளி வைப்பதாக மார்ச் 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 2003-ல் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை விதிகளின்படி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல் படியாகத் தேசிய மக்கள் தொகை பதிவேடு பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்க தேர்தலிலும் தனித்து போட்டியா? – ஒவைசி கூறுவது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாளன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31, க்குள்  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த ஆறு சமூகங்களுக்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை அனுமதிக்கிறது”.

ஆனால், ” குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குப் பயனளிக்கும் அதே வேளையில் முஸ்லிம்கள் தங்கள் குடியுரிமையைப் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவர்” என்பதால் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான  தகவல்கள் முதன்முதலில் 2010 இல் சேகரிக்கப்பட்டது. பின்னர் 2015 இல் புதுப்பிக்கப்பட்டது. பதிவேட்டைப் புதுபித்ததற்காக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

தற்போதைய நிலவரம் குறித்துத் தெரிந்துகொள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு எப்போது நடைமுறைக்கு வரும் எனும் கேள்விக்கு ”என்பிஆரின் அட்டவணையும், கேள்வித்தாளும் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும்”, என பதில் கிடைத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ”தேசிய மக்கள்தொகை பதிவேடுதான் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முதல் படி” என நாடாளுமன்ற உறுப்பினரும் அனைத்து இந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓவைசி தன் ட்விட்டர் பக்கத்தில் “ இந்தியாவின் ஏழை மக்கள் என்பிஆர் போன்ற நடைமுறையில் சிக்கினால் அவர்கள் சந்தேகத்திற்குரிய குடிமகன்கள் என்ற அடையாளத்தைப் பெறுவர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “என்பிஆர் அட்டவணை இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றால் அதை எதிர்த்து போராடும் அட்டவணையும் இறுதி செய்யப்படும்” என ஓவைசி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கும் தொடர்பில்லை என அரசு தெரிவித்துள்ளது என தி இந்து குறிப்பிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்