Aran Sei

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய திருத்தச்சட்டங்களின் நகலை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்து எறிந்துள்ளார்.

இன்று (டிசம்பர் 17), விவசாய சட்டங்கள் குறித்து விவாதிக்க சிறப்புக் கூட்டம் டெல்லி சட்டசபையில் கூட்டப்பட்டுள்ளது. அப்போது பேசிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால், “பேரிடர் காலத்தில் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்களை நிறைவேற்ற என்ன காரணம்? ராஜ்ய சபாவில் ஓட்டெடுப்பு நடத்தப்படாமல், மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டது இதுவே முதன்முறை.” என்று தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர்

அவர் இங்கு வந்ததே இந்த மூன்று விவசாய சட்டங்களையும் கிழித்தெறியதான் என்றும் பிரிட்டிஷாரைவிட மோசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் பகத்சிங்காக மாறியிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு விவசாயிகளை சந்தித்து, சட்டங்கள் குறித்து விளக்கவுள்ளோம் என்று கூறிக்கொண்டிருக்கிறது.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக மிண்ட் கூறியுள்ளது.

“அரசியலில் தோற்றால் இப்படித்தான் எதிர்கொள்வீர்களா” – அமித் ஷாவைச் சாடும் டெல்லி துணை முதல்வர்

மேலும், “விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படாது என்பதால் விவசாயிகளுக்கு இந்தச் சட்டங்களால் லாபம் உள்ளது என்று உத்திரப்பிரதேச முதல்வர் விவசாயிகளிடம் கூறுகிறார். இது தான் உங்கள் லாபமா?” என்றும் தங்கள் கோரிக்கைகள் மத்திய அரசின் காதுகளை எட்ட இன்னும் எத்தனை தியாகங்களைதான் விவசாயிகள் செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் கைலாஷ் கெலாட், மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளார்.

டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

இதைத்தொடர்ந்து, சட்டசபை உறுப்பினர்கள் மகேந்திர கோயலும் சோம்நாத் பர்ட்டியும் மூன்று விவசாய சட்டங்களின் நகல்களை கிழித்து எறிந்துள்ளனர் என்று என்டிடிவி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்