Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் இராணுவ வீரர்கள் – புலனாய்வு அமைப்புகள் விசாரணை

ஞ்சாப் மாநிலம் பத்திந்தாவில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் இராணுவ சீருடையில் ஒருவர் கலந்துகொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து,  புலனாய்வு அமைப்புகள் அவர் உண்மையிலேயே ராணுவ வீரரா என்று விசாரிக்க தொடங்கியுள்ளன.

ராணுவ உடை அணிந்திருந்த சீக்கியர் ஒருவர், ’என் தந்தை ஒரு விவசாயி. அவர் ஒரு பயங்கரவாதி என்றால் நானும் ஒரு பயங்கரவாதி தான்” என்று எழுதப்பட்ட  ஒரு பலகையை வைத்திருந்த புகைப்படம் செய்தித்தாள்கள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் பல முறை பகிரப்பட்டது. அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

” நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு, விவசாய சட்டங்களை ரத்து செய்க ” – முன்னாள் இராணுவத்தினர்

இதை தவிர, ஒரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஏ.கே .47 வகை துப்பாக்கி வைத்திருக்கும் இரண்டு ராணுவ வீரர்கள், நடிகை கங்கனா ராணாவத் விவசாயிகள் குறித்து கூறிய கருத்துக்களை பற்றி பேசிக் கொள்கிறார்கள்.  இது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

மேலும், பஞ்சாபி மொழியில் பேசும் அவர்களும், நாங்கள் விவசாயிகளின் மகன்கள் என்றும் எங்கள் தாய்மார்களைப் பற்றி தவறாக பேசுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் கூறுகிறார்கள்.

போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு – விவசாயிகளுக்காக வேலையை ராஜினாமா செய்த அரசு அதிகாரி

பலகை வைத்திருந்த ராணுவ வீரரின் புகைப்படத்தை பற்றி ட்வீட் செய்திருந்த, வடக்கு மற்றும் மத்திய பிராந்திய முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் எச்.எஸ் பானங், ”இதை விசாரித்து. இராணுவ ஒழுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார்.

நன்றி : Twitter

மேலும் ஒரு ட்வீட்டில், “இராணுவம் தெளிவான விதிகளை கொண்டுள்ளது. அதில் சமரசம் இல்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து : ராணுவ வீரர்களும் பதக்கங்களைத் திருப்பி தர முடிவு

இராணுவ வீரர்களிடையே ஏற்பட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் குறித்து இராணுவ தலைமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இராணுவ வீரர்கள் போராட்டங்களில் பங்கேற்பதை தடைசெய்யும் கடுமையான விதிகள் உள்ளன என்றும்  இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

“புகைப்படத்தில் உள்ள இராணுவ சீருடை அணிந்தவர் உண்மையிலேயே ஒரு இராணுவ வீரரா இல்லையா என்பதை  கண்டறிய உள்ளோம். முன்னாள் இராணுவ வீரர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றாலும், பணியில் உள்ள இராணுவவீரர்கள் அத்தகைய நடத்தையில் ஈடுபட்டால் மன்னிக்கவே முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கப்படும்.” என்று பெயர் சொல்ல விரும்பாத இராணுவ அதிகாரி கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

மேலும், இந்திய முன்னாள் படைவீரர் அமைப்பை சேர்ந்த கேப்டன் ஜஸ்பால் சிங் கூறுகையில், ”விவசாயிகள் போராட்டத்தில் எங்கள் முழு அமைப்பும் பங்கேற்றுள்ளது. நாங்கள் 1,000 முன்னாள் படைவீரர்கள் பானிபட்டைக் கடந்து, சிங்கு எல்லையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்