Aran Sei

‘ஒரு பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது’ – நடிகை அன்னா பென்

லையாள சினிமாவில் தற்போது பிரபலம் அடைந்து வரும் நடிகையான அன்னா பென், தான் பொது இடத்தில் உடல் சீண்டலுக்கு ஆளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.

கும்பலாங்கி நைட்ஸ், ஹெலன், கப்பேலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அன்னா பென், நேற்று (டிசம்பர் 17) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

அதில், “பொதுவாக சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தும் வழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. லூலூ மால் சூப்பர்மார்கெட்டில், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு இடத்தில் இரண்டு ஆண்கள் என்னை கடந்து சென்றனர். அதில் ஒருவர் என்னை கடந்து செல்லும்போது வேண்டுமென்றே என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார். அது எனக்கு மிகுந்து அதிர்ச்சியை கொடுத்ததால் என்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

நவீன அடிமைப் பெண்கள்: அதிர்ச்சியூட்டும் ஐநா அறிக்கை

அவர் வேண்டுமென்றே செய்தாரா என்று அப்போது உறுதியாக எனக்கு தெரியவில்லை என்றும் ஆனால் ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்றால் நம்மால் அதை உணர முடியும் என்றும் அன்னா குறிப்பிட்டுள்ளார்.

”சற்று தொலைவில் இருந்த என் சகோதரி நடந்ததை தெளிவாக பார்த்திருக்கிறார். அவர் என்னிடம் வந்து நான் நன்றாக இருக்கிறேனா என்று கேட்டார். என்னால் அப்போது எதையும் தெளிவாக யோசிக்க கூட முடியவில்லை. சில நிமிடங்கள் உறைந்து போய் இருந்தேன். பிறகு, நான் அவர்களிடம் செல்ல முயன்ற போது, அவர்கள் என்னை முற்றிலுமாக தவிர்த்தனர். அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரிவிந்துவிட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு நழுவி சென்றுவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

இந்தியப் பெண்கள் ‘தரைமட்டம்’ – அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன்

”அப்போதும் நான் மிகுந்து கோபத்துடன் இருந்தேன். ஏனென்றால், அந்த தருணத்தில் என்னால் அவர்களை எதுவுமே சொல்லமுடியவில்லை. எந்த உணர்ச்சிகரமான வார்த்தைகளும் அப்போது என்னுள் இருந்து எழவில்லை.” என்று தனது நிலையை வார்த்தைகள் கோர்த்து விளக்க முயன்றுள்ளார் அன்னா.

அதன் பிறகு அவரும் அவரது சகோதரியும், அவ்விடத்தை விட்டு வெளியேறி, அவரது தாயும் சகோதரரும் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போதும், அந்த இரு நபர்களும்  எல்லோருக்கு தெரியும் வண்ணம் வெளிப்படையாக இவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளதாக அன்னா பென் எழுதியுள்ளார்.

பெண்களை தவறாக பேசியவரை தாக்கிய பெண்களுக்கு முன் ஜாமீன் – கேரள உயர் நீதிமன்றம்

”அம்மாவும் என் சகோதரரும் பொருட்கள் வாங்கும் மும்முரத்தில் இருந்தனர். நான் எங்கள் பொருட்கள் நிரப்பப்பட்ட தள்ளுவண்டியை, பணம் கட்டும் இடத்தை நோக்கி நகர்த்தி சென்றேன். அவர்கள் இருவரும் மீண்டும் எங்கள் அருகில் வந்து, எங்களுடன் பேச முயன்றனர். அது முரட்டுத்தனமாக இருந்தது.” என்று  அவருக்கு ஏற்பபட்ட தொல்லைகளை பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

”நான் நடித்த திரைப்படங்களின் பெயர்களை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினார்கள். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட்டோம். என் அம்மா எங்களை நோக்கி வருவதைக் கண்டவர்கள், அந்த இடத்தில் இருந்து நழுவிச் சென்று விட்டனர்.” என்று அன்னா எழுதியுள்ளார்.

பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி

”இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அவர்களிடம் நான் சொல்லிருக்க வேண்டிய ஆயிரம் வார்த்தைகளும் செய்திருக்க வேண்டிய நூறு எதிர்வினைகளும் எனக்கு தோன்றுகிறது.  ஆனால் நான் எதையும் சொல்லவும் இல்லை. செய்யவுமில்லை. உண்மையை சொல்வதானால், என்னால் எதையும் செய்ய முடியவில்லை. இதை இங்கே பகிர்வதனால், எனக்கு சிறிய நிம்மதி கிடைக்கிறது. ” என்று தன் இயலாமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

”அவர்கள் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி நடந்து  போனதும், இவை எல்லாவற்றைப் பார்த்தும் என்னால் எதுவும் எதிர்வினையாற்ற முடியாமல் போனதும் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற சம்பவங்கள் எனக்கு நடப்பது இது முதல் முறை இல்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும், மிகக் கடினமாகவும் இதை கடந்து போக வேண்டியுள்ளது.” என்று தான் படும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘இந்தியாவில் மனுஸ்மிருதி எதிர்ப்பே, பெண்ணுரிமை போராட்டம்’ – கவிதா கிருஷ்ணன்

”பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும், ஒரு பாதுகாப்பு கவசத்துடனேயே செல்ல வேண்டியிருக்கிறது.” என்றும் “பொது இடங்களில் குனியும் போதும் நிமிரும்போதும் என் கைகளால் என் மார்பை” மறைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”இன்னும் பட்டியல் நீளும். வீட்டில் இருக்கும் நாட்களில், இதே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என் அம்மா, தங்கை மற்றும் தோழிகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது. காரணம் இது போன்ற மோசமான ஆண்கள் தான். நீங்கள் எங்கள் (பெண்கள்) பாதுகாப்பை பறித்துவிட்டீர்கள். எங்கள் சௌகரியத்தை பறித்து விட்டீர்கள். பெண்மக்களின் மொத்த மகிழ்ச்சியையை பிறித்து விட்டீகள்.” என்று அன்னா பெண் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்

”இது போன்ற இழிச்செயலை எப்போதாவது ஒரு பெண்ணிற்கு நீங்கள் செய்வீர்களானால், நரகத்திற்கு போவதை தவிர வேறெதற்கும் தகுதியற்ற ஆளாக மாறுவீர்கள். நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். நீங்கள் எப்போதும் அந்த இருவரைப் போல இழிச் செயல்களை செய்ய மாட்டீர்கள் என்று.” அன்னா பெண் இதை படித்துக்கொண்டிருக்கும் ஆண்களை நோக்கி பேசியுள்ளார்.

”இது போன்ற இழிச்செயலை செய்யும் ஆண்களின் முகத்தில் ஓங்கி அறைந்துவிட வைக்கும், என்னிடம் இல்லாத அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று இதைப் படித்துக் கொண்டிருக்கும் பெண்களிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார் அன்னா பெண்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்