Aran Sei

வெளியேறும் மனித உரிமைகள் அமைப்பு – இந்திய அரசின் அடுத்த வேட்டை

ம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா  மனித உரிமைகளுக்கான அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால், அந்த அமைப்பு இந்தியாவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு வெளியேறுகிறது.

இந்த அமைப்பு தற்போது செய்துகொண்டிருக்கும் அத்தனை செயற்பாடுகளையும், ஆராய்ச்சிகளையும் நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அரசு மனித உரிமை அமைப்புகளை வேட்டையாடும் நடவடிக்கையாகத்தான் இதை பார்க்க முடியும் என்கிறது அந்நிறுவனம்.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகளுக்கான அமைப்பு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடைய விதிகளின் படியே இத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது. மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சம் இந்தியர்கள் எங்கள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரு லட்சம் இந்தியர்கள் நிதியுதவி செய்திருக்கிறார்கள். இந்த மொத்த நிதிகளும் எந்த வகையிலும் வெளிநாட்டு நிதிகளோடு தொடர்புடையது அல்ல. வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டம், 2010 (எஃப்சிஆர்ஏ 2010) படியே எல்லா நிதி பரிவர்த்தனைகளும் நடந்தன” என்று தங்கள் வலைத்தளத்தில் கூறியுள்ளது.

நன்றி : Rebuplic world

”அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்காணித்து, அதன் வங்கிஎ் கணக்குகளை முடக்குவது என்பது எதார்த்தமாக நடந்தது இல்லை. அமலாக்கத் துறை போன்ற இந்திய அரசின் நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து தொந்தரவுக்கு ஆட்பட்டோம். தில்லி கலவரத்திலும் ஜம்மு காஷ்மீரிலும் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்தது தில்லி காவல்துறைக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் பிடிக்கவில்லை.” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவிநாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ”இந்திய அரசும் அமலாக்கத் துறையும் மனித உரிமை அமைப்புகளையும் அதன் ஊழியர்களையும் ஒரு கிரிமினல் குற்றவாளிகளை போல நடத்துகிறது. எங்கள் மேல் குற்றம் சுமத்தும் அரசிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் கருத்து சுதந்திரத்தை முழுதாக அழிக்கவே இந்திய அரசு முயற்சிக்கிறது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கே எதிரானது.” என்கிறார் அவிநாஷ் குமார்.

இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் அ.மார்க்ஸிடம் பேசிய போது, “வெளிநாட்டு நிதியில் எந்த தொண்டு நிறுவனமும் இயங்க கூடாது என்கிறது, அரசு. இது நாட்டிற்கு எதிராக செயல்படும் அமைப்பாக இருந்தால் சரி. ஆனால் அம்னெஸ்டி இண்டர்நேஷனல்  என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனித உரிமை அமைப்பு. அதை வெளியேற்றுவதன் மூலம் அரசு கருத்து சுதந்திரத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் நசுக்க முடியுமோ அதை எல்லாம் செய்கிறது” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்