ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரத்தில் தலீபான்களைக் குறிவைத்து அமெரிக்கப் படை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஹேல்மேண்ட் மாகாணத்தின் தலைநகரான லக்ஷர் காகின் புறநகரில் தலீபான் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காரணத்தால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டி அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையிலும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என தி இந்து இணையத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
”ஹெல்மெண்ட் மாகாணத்தில் தலீபானின் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, நாடெங்கும் நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்களைக் குறைக்க வேண்டும்.” என்று படைத்தளபதி ஸ்காட் மில்லர் வலியுறுத்தியுள்ளார்.
"The Taliban need to immediately stop their offensive actions in Helmand Province and reduce their violence around the country. It is not consistent with the US-Taliban agreement and undermines the ongoing Afghan Peace Talks."
Gen Scott Miller, Commander— USFOR-A Spokesman Col Sonny Leggett (@USFOR_A) October 12, 2020
அமெரிக்க ராணுவச் செய்தித் தொடர்பாளர் சோனி லெக்கெட் ”ஆப்கான் படையைப் பாதுகாக்கும் முயற்சியில், கடந்த இரண்டு நாட்களாக ஹெல்மெண்ட் மாகாணத்தில் அமெரிக்கப் படை தலீபான் படையைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.”
“இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க-தலீபான் இடையேயான ஒப்பந்தத்துக்கு உட்பட்டே நிகழ்த்தப்பட்டுள்ளன. தலீபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஆப்கான் படையைப் பாதுகாப்பதில், அமெரிக்கப் படை தொடர்ந்து ஆதரவளிக்கும்.” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் ட்ரம்ப் தனது ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானில் சேவை புரிந்துவரும் நமது தீரம் மிக்க ஆண்களும் பெண்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.” என உறுதியளித்துள்ளார்.
We should have the small remaining number of our BRAVE Men and Women serving in Afghanistan home by Christmas!
— Donald J. Trump (@realDonaldTrump) October 7, 2020
பிப்ரவரி மாதம் தலீபான் அமைப்பு அமெரிக்கப் படையுடன் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நகர்ப்புறங்களில் எந்தவிதத் தாக்குதல்களும் நடத்தப்படக் கூடாது. மே மாதம் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்கா வாக்குறுதி அளித்திருக்கிறது.
தலீபான் அமைப்பை ஒழிக்கவேண்டி அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்து கடந்த செப்டம்பர் 11-ம் தேதியோடு 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.