Aran Sei

அம்பேத்கரின் மனுதர்ம எரிப்பு மாநாடு – அழைப்பிதழின் நகல்

னு தர்மம் பெண்களுக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கோள் காட்டி பேசியதற்குப் பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனுதர்மத்தின் மக்கள் விரோதக் கருத்துகளை எதிர்த்து அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களும் அதை எரிக்க அறைகூவல் விடுத்திருந்தனர் என்பதை பலர் சுட்டிக்காட்டினர்.

மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்

மேலும், பல மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் மனு தர்மத்தின் பெண்கள் விரோத, பெரும்பான்மை மக்கள் விரோத கருத்துகளைக் கண்டித்தும் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்து கூறினர்.

மனுநீதி எதிர்ப்பு : திருமாவுக்குப் பெருகும் ஆதரவு

 

மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தத் தீர்மானிக்கிறோம் என்று முழக்கமிட்டு அண்ணல் அம்பேத்கர் தலைமையில் 1927 டிசம்பர் 25 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மகத் நகரில் கூடிய சத்யா கிரகிகளின் மாநாடு நடைபெற்றது. மராத்தியில் எழுதப்பட்ட அம்மாநாட்டு அழைப்பிதழில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

`25-12-1927 அன்று முதல் மகத்தில் தொடங்க இருக்கும் சத்தியாகிரகத்தில் பங்கெடுக்க இருக்கும் மக்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், அவர்கள் தங்களோடு ஒரு தட்டு, சொம்பு, கம்பிளி மற்றும் மூன்று நாட்களுக்கான உணவை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாங்கள் இங்கே உணவுக்கான ஏற்பாட்டைச் செய்ய இருக்கிறோம் என்றாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஏற்பாட்டைச் செய்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

டாக்டர்.அம்பேட்கர் மற்றும் இதர சத்தியாகிரக கமிட்டியினர் மும்பையிலிருந்து 24-12-1927 அன்று படகின் மூலம் கிளம்ப இருக்கிறார்கள். அவர்களோடு வர விரும்புகிறவர்கள் 15-12-1927க்கு முன் தங்களுடைய போக்குவரத்துக்கான செலவான 5 ரூபாயை பகிஸ்கிருத் ஹித்கர்ணி சபையின் அலுவலகத்தில் வழங்கினால், அவர்களுக்குத் தனியாகப் படகு ஏற்பாடு செய்யப்படும்.

ஆகவே, இந்த வசதியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அமைப்பின் செயலாளரிடம் பணத்தைக் கொடுத்து தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டப்படுகிறார்கள். அமைப்பினரோடு வராதவர்கள், தாஸ்காவ்-ல் இறங்கிக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மஹத்துக்கு அருகே சத்தியாகிரகத்தின் சமயத்தில் அதிகமான கூட்டம் கூடும். அந்த வேளையில் நம்முடைய ஆட்களைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ள, சத்தியாகிரகத்தில் பங்குகொள்ளும் அனைவரும் பஹிஸ்கிருத் ஹித்கர்ணி சபையின் அடையாள அட்டையை நெஞ்சில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

யாரிடம் அடையாள அட்டை இல்லையோ அவர்களுடைய பாதுகாப்புக்கோ, பிற தேவைகளுக்கோ கமிட்டி பொறுப்பேற்க முடியாது. மேற்கண்ட, அடையாள அட்டையின் விலை 2 அணா என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படுகிறவர்கள் அலுவலகத்தில் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.’

 

இன்றைக்கும் மும்பையில் அந்த நாளில் “மனுஸ்மிருத தஹன் திவஸ்” கொண்டப்படுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்