Aran Sei

போராடும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தலைப்பாகை – உற்சாகப்படுத்தும் கிராம மக்கள்

மூன்று விவசாய திருத்தச் சட்டங்களுக்கு திரும்ப பெறக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில கிராமங்களிலிருந்து போர்வைகள், கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்றவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் சிறப்பம்சமாக பஞ்சாபியர்கள் அணியும் தலைபாகையை, இலவசமாக வழங்கும் மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

“அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!” – பஞ்சாப் விவசாயிகளின் போராட்ட உணர்வு

நேற்று முன் தினம் (டிசம்பர் 18), பஞ்சாபில் உள்ள ஃபிரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிரி பிரி சேவை சங்கம், பேச்சாளர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடை அருகில் இந்த மையத்தை நிறுவியுள்ளது என்றும் அதை வாங்க மக்கள் பெருமளவில் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது என்றும் தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், முதல் இரண்டு நாட்களில், இந்த மையத்தில் நூற்றுக்கணக்கானோர்களுக்கு தலைப்பாகைகளை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தினமும் 400 மீட்டர் துணி இதற்காக வாங்கப்படுவதாகவும் அந்த மையத்தின் தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

`ஜியோவைப் புறக்கணியுங்கள்’-பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

“எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் இந்த மிரி பிரி சேவை சங்கம் நடத்தப்படுகிறது. நாங்கள் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகளையும், குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியையும் வழங்குவதற்காக இங்கு பணியாற்றி வருகிறோம். போராட்டத்தில் இணைய ஒவ்வொரு நாளும் இங்கு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை கருத்தில் கொண்டு, இந்த உதவும் மையத்தை அமைக்க நாங்கள் முடிவெடுத்தோம்.” என்று மிரி பிரி சங்கத்தின் தன்னார்வலரும், விவசாயியுமான விக்ரம்ஜீத் சிங் கூறியுள்ளதாக தி இந்து சுட்டிக்காட்டியுள்ளோம்.

“யார் தலைப்பாகை அணிய விரும்புகிறாரோ அவர் இங்கே வந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். அவர் சீக்கியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்களும் யாருடைய மதத்தையும் கேட்க மாட்டோம். அனைவரையும் வரவேற்கிறோம்.” என்று வரவேற்றுள்ளார்.

விவசாயிகள் விஷம் குடித்தால் கவலையில்லை, பீட்சா சாப்பிடுவது செய்தியா?

“எங்கள் கிராமத்திலிருந்து இந்த சிங்கு எல்லையை அடைய சுமார் 8 முதல் 10 மணி நேரம் ஆகும். எனவே ஒவ்வொரு நாளும், நிறைய துணிகள் அங்கிருந்து அனுப்பப்படுகிறன. அது மறுநாள் காலையில் இங்கு வந்து அடையும். முதல் நாள், நாங்கள் இந்த மையத்தை காலை 11 மணியளவில் தொடங்கினோம், 250 க்கும் மேற்பட்டோர் வந்தனர். நேற்று (டிசம்பர் 19), நாங்கள் காலை 10 மணிக்குத் தொடங்கினோம். பிற்பகலுக்குள் 400  மேற்பட்டோர் வந்துள்ளனர்.” என்று விக்ரம்ஜீத் சிங் தி இந்துவிடம் மையத்தை பற்றி விளக்கியுள்ளார்.

இந்த மையம் விவசாயிகளின் போராட்டம் நீடிக்கும் வரையிலும், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரையிலும், இந்த மையத்தின் சேவைகள் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்