பீகாரில் வற்புறுத்தித் திருமணம் செய்தது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு 3336 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ,கடந்த 2021 ஜனவரி முதல் பிப்ரவரி வரை வற்புறுத்தித் திருமணம் செய்தது தொடர்பாக 702 கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது
கடத்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பீகாரில் பல மாவட்டங்களில் இது போன்ற எண்ணற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் சரியாக கையாளப்படவில்லை – பீகார் காவல்துறை கூடுதல் இயக்குனர் அறிக்கை
மேலும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 371 கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் , கடந்த 2020 ஆம் ஆண்டு 1,111 வழக்குகள் பதிவாகிவுள்ளதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 3336 கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் ,அதில் 8 வழக்குகள் மட்டுமே புனையப்பட்ட வழக்குகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதே போன்று 2019 ஆம் ஆண்டு 4498 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அதில் 10 வழக்குகள் புனையப்பட்ட வழக்குகளாகும் என காவல்துறை கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் வைசாலி, முசாபர்பூர், பெகுசராய், பாட்னா, சமஸ்திபூர், ஜெஹனாபாத், லக்கிசராய், ஜமுய் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசு வேலை பார்க்கும் மணமகன்கள் அதிகளவில் திருமணத்திற்காகக் கடத்தி செல்லப்படுவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்றே பெற்றோரின் எதிர்ப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாகவும் அதிகளவில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், கொரனோ காலத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக பீகார் காவல்துறை குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.