Aran Sei

‘விவசாயிகள் நிலங்களை இழந்து, அழிந்து போவார்கள்’ – அகிலேஷ் யாதவ்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெற இருந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க முயன்ற, அரசியல் இயக்கத் தலைவர்களையும் தொண்டர்களையும் உத்தரப்பிரதேச காவல்துறை தடுத்து வைத்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலாஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  ’விவசாயிகள் யாத்திரை’ என்ற பெயரில், உத்தரப்பிரதேசத்தில் தொடர் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

விவசாயிகளின்  டிராக்டர் பேரணியில் கலந்துக் கொள்வதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணாஜ்ஜுக்கு செல்ல, சம்மஜ்வாதி கட்சியில் தலைவர் அகிலேஷ் யாதவ் முயன்றுள்ளார். அப்போது உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதைதொடர்ந்து, காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அகிலேஷ்,அங்கேயே தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விவசாயிகளின் உரிமையை பெருமுதலாளிகள் பறிப்பதா? – நடிகர் கார்த்தி கண்டனம்

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, அதில் கலந்துக்கொள்ள செல்லும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் காவல்துறையினரால், மாநிலம் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், லக்னோவில் உள்ள விக்ரமாதித்யா மார்க்கில் உள்ள அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும், “எனது வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.” என்றும் புகார் கூறியுள்ளார்.

“கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால், தலைநகரை முடக்குவோம்” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

சமாஜ்வாதி கட்சி தொண்டர்களுடன் காவல்துறையின் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகளை அழிக்கும் சட்டங்களைப் பாஜக கொண்டு வந்துள்ளது என்றும் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

நன்றி : aajtak

“சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு நிகழ்ச்சிக்காகக் கண்ணாஜுக்கு வருகை தருவதாக இருந்தது, ஆனால், மாவட்ட நீதிபதி அதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, சமாஜ்வாதி கட்சி அலுவலகத்திற்கு செல்லும் விக்ரமாதித்யா மார்க்கின் பகுதிக்குத் தடைப் போடப்பட்டது.” என்று கௌதாம்பள்ளி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி சந்திரசேகர் சிங் கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் – கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை

மேலும், அமைதிவழிப் போராட்டம் என்பது ஒவ்வொரு தனிநபரின் ஜனநாயக உரிமை, போராட்டத்தைத் தடுப்பது என்பது, மாநில அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையைக் காட்டுகிறது என்று சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி தெரிவித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

“மாநில அரசின் இந்த ஜனநாயக விரோத செயலானது எனது அரசியலமைப்பு உரிமையையே மீறுவதாக  உள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனது சிறப்பு உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது.” என்று அகிலேஷ் யாதவ், மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்