“கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் பாஜகவின் தடுப்பூசியை நம்பவில்லை” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
பின்னர், தான் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், மாறாக பாஜக அரசின் கீழ் உள்ள மருத்துவ முறை மீது அல்ல என்று முந்தைய கருத்திற்கு அவர் விளக்கம் அளித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
‘கொரோனா தடுப்பூசி எப்போது வரும் மோடிஜி?’ – ராகுல்காந்தி கேள்வி
நேற்று (ஜனவரி 2), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகிலேஷ் யாதவ், “நாங்கள் பாஜகவின் ’அரசியல் தடுப்பூசியை’ பெற மாட்டோம். சமாஜ்வாடி அரசு இலவசமாக எல்லோருக்கும் தடுப்பூசி வழங்கும்.” என்று அவர் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
“நான் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன். அதுவும் பாஜக எங்களுக்கு வழங்குவதை நான் எப்படி நம்புவேன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான விதிமுறைகளை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்றும், ஆளுங்கட்சி நிகழ்ச்சிகள் நடத்தினால் வராத கொரோனா, எதிர்க்கட்சிகள் ஏதேனும் நிகழ்ச்சி நடத்தினால் மட்டும் வருமென அரசு நம்புவதாக அகிலாஷ் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்
மேலும், மத்திய அரசின் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பற்றி கூறுகையில், “கைதட்டுவதாலும், தட்டுகளை அடித்து சத்தம் எழுப்புவதாலும், மருத்துவமனைகளின் மேல் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவதாலும் கொரோனா தொற்று போய்விடும் என்று இந்த அரசு நம்புகிறது.” என்று விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 2) கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகை இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் முதல் ஒத்திகை நடைபெற்றது. முந்தைய ஒத்திகையின் போது கோரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவது சந்தேகம் – நிபுணர் குழு தலைவர்
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துவருகிறது.
இது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஒத்திகை துவங்கியுள்ளது. மத்திய அரசு அமைத்த வல்லுநர்கள் குழுவால் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.