Aran Sei

‘மதவாத சக்திகளை எதிர்க்க பலமான எதிர்க்கட்சிகள் தேவை’ – லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தோடு இணைத்தார் சரத் யாதவ்

ரத் யாதவின் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியானது (எல்ஜேடி) பீகாரின் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவ் நிறுவிய ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் (ஆர்ஜேடி) இணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், லோக்தந்த்ரிக் ஜனதாதளம் கட்சியின் தலைவரான சரத் யாதவ், தனது கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 20) டெல்லியி்ல் நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியின் இணைக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

இது குறித்து, இந்நிகழ்ச்சியில் பேசியுள்ள சரத் யாதவ், “தற்போதைய சூழலில், மதவாத சக்திகளை எதிர்க்க பலமான எதிர்க்கட்சி தேவைப்படுகிறது. அதற்காக, மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இதை நோக்கமாக கொண்டு ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றாக சேரவேண்டும் என்ற அடிப்படையில் லோக்தந்த்ரிக் ஜனதா தளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய தலைவரும் பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இந்த இணைப்பை வரவேற்றுள்ளார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஜனதா தளம் கட்சியில் லாலு பிரசாத் யாதவும் சரத் யாதவும் இருந்தனர். பின்னர், ஜனதா தளம் கட்சி பிளவுபட்டபோது, லாலு பிரசாத் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியையும் சரத் யாதவும் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமாரும் இணைந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் தொடங்கினார்கள்.

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

பின்னர், 2018ஆம் ஆண்டு, நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வெளியேறிய சரத் யாதவ், லோக்தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார்.

25 ஆண்டுகளுக்குப் பின் லாலு பிரசாத் யாதவும் சரத் யாதவும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்