Aran Sei

’உரிமைக்காக போராடும் விவசாயிகளுக்கு நான் ஆதரவளிக்கிறேன்’ – நடிகர் ஊர்வசி ரௌடேலா

பாலிவுட் நடிகர் ஊர்வசி ரௌடேலா, விவசாய சட்டங்களை நீக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்துள்ளார். மேலும், விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு என்றும் தங்களின் உரிமைகளுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 8), 26 வயதான நடிகர் ஊர்வசி ரௌடேலா, ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவுக்கு வருகை தந்துள்ளார்.

அப்போது, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை பற்றி செய்தியாளர்களிடம் பேசியவர், “விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதால், நான் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறேன்.” என்று கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

சமீப காலமாக, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் தாப்சி பன்னு, ஸ்வரா பாஸ்கர் போன்ற முன்னணி நடிகைகளும், சில கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, நடிகர் தாப்சி பன்னு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து பெரும் பேச்சு பொருளானதை தொடர்ந்து, பாலிவுட்டில் நடிகர்கள் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

மறுபுறம், தாப்சி பன்னு கருத்திற்கு சில விமர்சனங்களும் எழுந்தன.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்