Aran Sei

” பாஜகவுடனும் உள்ளேன், விவசாயிகளுடனும் உள்ளேன்.” – மக்களவை உறுப்பினர், இந்தி நடிகர் சன்னி தியோல்

சன்னி தியோல் - Image Credit : ndtv.com

த்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடந்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த பாஜகவின் மக்களவை உறுப்பினரும், ந சன்னி தியோல், தான் இப்போது கட்சியுடனும் விவசாயிகளுடன் இருப்பதாகவும்,  போராட்டத்தை சிலர் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்த நினைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், தில்லியில் நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டங்களை பற்றி குறிப்பிடுகையில், இந்த பிரச்சினையானது அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் நடப்பது என்றும் வேறு யாரும் இடையில் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

`சட்ட நீக்கம் வேண்டும் : சட்ட திருத்தம் அல்ல’ – பேச்சுவார்த்தை முடிவில் விவசாயிகள்

மேலும், “அரசும் விவசாயிகளும் இந்த பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு தீர்வைக் காண்பார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள பலர் முயற்சித்து வருவதாகவும், அதற்காக சிக்கல்களை உருவாக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்கள் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கவில்லை.  அவர்களுக்கு தனிப்பட்ட சுயநல திட்டங்கள் இருக்கிறது. அதற்காக இப்படி சிக்கல்களை உருவாக்க முயல்கிறார்கள்.” என்று சன்னி தியோல் கூறியுள்ளார்.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

சன்னி தியோலின் சக நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து, தற்போது நடைப்பெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவரை பற்றிக் குறிப்பிடுகையில், “தேர்தலின் போது (2019 மக்களவைத் தேர்தல்) என்னுடன் இருந்த தீப் சித்து, இப்போது நீண்ட காலமாக என்னுடன் இல்லை. ஆகவே அவர் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் நான் பொறுப்பல்ல. அதுமட்டுமல்ல, அவருடைய எந்தவொரு செயலுக்கும் நான் பொறுப்பேற்றக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

“எங்கள் அரசு எப்போதும் விவசாயிகளின் நலனைப் பற்றி சிந்திக்கிறது. விவசாயிகளுடனான பேச்சிவார்த்தைகளுக்கு பிறகு, அரசு சரியான முடிவுகளை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்