Aran Sei

’என் விவசாய சகோதரர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ – நடிகர் தர்மேந்திரா

ன்றைய பேச்சுவார்த்தையில் விவசாய சகோதரர்கள் நீதியைப் பெறுவார்கள் என்று பாஜகவை சேர்ந்த பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று (ஜனவரி 4), போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையேயான ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த ஆறாம் கட்ட பேச்சு வார்த்தையில், விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் முக்கியத்துவம் குறைவான இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்குச் சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இன்றைய பேச்சு வார்த்தையில் அவை விவாதிக்கப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இன்று (ஜனவரி 4) மூத்த நடிகரும், பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த தர்மேந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகள் பேச்சு வார்த்தைக் குறித்து கருத்து பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் தர்மேந்திரா “இன்று என்னுடைய விவசாய சகோதரர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் என் முழு மனதுடன் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு உன்னதமான ஆன்மாவிற்கும் அதற்குரிய தீர்வு கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பே, டெல்லியில் விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தன் கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

“பேச்சுவார்த்தையை அமித்ஷா திசை திருப்பினார்” – போராடும் விவசாயிகள் குற்றச்சாட்டு

கடந்த மாதம், தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய விவசாய சகோதரர்கள் படும் துன்பங்களைக் காணும்போது, நான் மிகவும் வேதனையடைகிறேன். இதற்கு அரசு வேகமாக ஏதாவது செய்ய வேண்டும்.” என்று வலியிறுத்தியிருந்தார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்