2019 ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதியப்பட்ட 93 தேசத் துரோக வழக்குகளில், 96 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, பிப்ரவரி 10 ஆம் தேதி, மாநிலங்களவையில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.
76 நபர்கள்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில், 29 நபர்கள்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள ஜி கிஷன் ரெட்டி, நாட்டில் அதிக எண்ணிக்கையாகக் கர்நாடகாவில் 22 வழக்குகளில் 18 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அசாமில் பதியப்பட்ட 17 வழக்குகளில் 23 நபர்களும், ஜம்மு & காஷ்மீரில் பதியப்பட்ட வழக்கில் 16 நபர்களும், 10 வழக்குகள் பதியப்பட்ட உத்திரபிரதேசத்தில் 9 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தேசத் துரோக சட்டத்தை (இந்திய தண்டனை சட்டத்தின் 124A) வலுப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா, என்ற மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த, அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ”சட்ட திருத்தம் தொடர்பான வேலைகள் தொடந்து நடைபெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.
Sources : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.