Aran Sei

” கேரளாவில் பாஜக வளராததற்கு காரணம் 90% கல்வியறிவு இருப்பதே ” – கேரளா பாஜக தலைவர்

கேரளாவில் பாஜக வளராததற்கு ‘கேரளாவில் 90 விழுக்காடு கல்வியறிவு’ இருப்பதே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளா பாஜகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினரான ஓ. ராஜகோபால், தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பாஜக ஏன் வளரவில்லை என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

”கேரளா ஒரு வேறுபட்ட மாநிலம். இரண்டு, மூன்று காரணிகள் உள்ளன. கேரளாவில் 90 சதவீதம் கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார்கள், அவர்கள் வாதம் செய்கிறார்கள்… இவை கல்வி கற்றவர்களின் பழக்கவழக்கங்கள். அது ஒரு பிரச்சினை” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

“இரண்டாவது சிறப்பு மாநிலத்தில் 55 விழுக்காடு இந்துக்கள் மற்றும் 45 விழுக்காடு சிறுபான்மையினர் உள்ளனர். எனவே அந்த அம்சம் ஒவ்வொரு கணக்கீட்டிலும் வருகிறது. அதனால்தான் கேரளாவை வேறு எந்த மாநிலத்துடன் ஒப்பிட முடியாது. இங்கே நிலைமை வேறு. ஆனால் நாங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகிறோம். எங்கள் வளர்ச்சி மெதுவாகவும், சீராகவும் உள்ளது” என ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இடது சாரிகள் வளர்ச்சி உள்ளது, ஆனால் காங்கிரஸுடன் இணைவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என ராஜகோபாலன் கூறியுள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்