Aran Sei

ஹரியானா அரசு ஊழியர்களுக்கு ஆர்.எஸ்.எஸில் சேர விதிக்கப்பட்டிருந்த தடை – 54 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கி உத்தரவிட்டுள்ள மாநில அரசு

credits : the indian express

ரியானா அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பதாக அனைத்து துறை தலைவர்களுக்கும் ஹரியான அரசு தலைமை செயலாளர் விஜய் வர்த எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா சிவில் சர்வீஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) விதிகள் 2016ஐ நடைமுறைப்படுத்தல் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், “ஹரியானா அரசு ஊழியர்கள் ’அரசியல் மற்றும் தேர்தலில் பங்கேற்பது’ மற்றும் ‘அமைப்புகளில் சேர்ந்து செயல்படுவது’ தொடர்பாக 1967,1970, 1980 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டிருந்த அரசாணைகள் தற்போதைய காலத்திற்கு பொருத்தமற்றதாக உள்ளதால், அவை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சிமாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரகர் போல் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்