Aran Sei

கடந்த மூன்று ஆண்டுகளில், 36.94 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு – தொழிலாளர் அமைச்சகம் தகவல்

டந்த மூன்று ஆண்டுகளில் 36.94 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சத்தின் தரவுகள் தெரிவிப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மனிதர் வேலை செய்யும் எட்டு மணி நேரம்,  ஒரு மனித வேலை நாளாகும். ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை செய்கிறார்கள் என்றால், ஒரு நாள் வேலை இழப்பு ஏற்பட்டால் அது 100 மனித வேலை நாட்கள் என்று கணக்கிடப்படுகிறது.

210 வேலை நிறுத்தங்கள் மற்றும் ஊடரங்கினால், அரசு மற்றும் தனியார் துறைகளில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளின் சக்தியை அதிகரிக்க கோயிலுக்கு அடியில் தங்கத்தைப் புதைத்த நீதிபதிகள்: குற்றவழக்குப் பதிய உத்தரவிட்ட நீதிமன்றம்

இந்த இழப்புகளில் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவை உச்சத்தில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில், 2018 முதல் 2020க்கு இடையே பொதுத்துறை நிறுவனங்களில் 89 வேலை நிறுத்தங்களால், 19.91 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே காலத்தில் தனியார் துறையில் 121 நிறுத்தங்களால் 17.03 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தரவுகள் தெரிவிப்பதாக, தி வயர் கூறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 20 வேலை நிறுத்தங்களால் நாட்டிலேயே அதிகபட்சமாக, கேரளா 8.80 லட்சம் மனித வேலை நாட்களை இழந்திருப்பதாகவும், வேலை நிறுத்தனங்களின் அடிப்படையில் நாட்டிலேயே முதலிடமாக 51 வேலை நிறுத்தங்களால், 4.39 லட்சம் வேலை நாட்களைத் தமிழகம் இழந்திருப்பதாகவும், மூன்றாவதாக கர்நாடகா, 3.78 லட்சம் வேலை நாட்களை 17 வேலை நிறுத்தங்களால் இழந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறரை பணியமர்த்தக்கூடாது – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

அதிக வேலை நாட்களை இழந்து மாநிலங்களில் முதல் ஐந்து மாநிலங்களில், 16 வேலை நிறுத்தங்களால் 3.11 லட்சம் வேலை நாட்களை இழந்து மத்திய பிரதேசமும், 19 வேலை நிறுத்தங்களால் 3.09 லட்சம் வேலை நிறுத்தங்களால் மகாராஷ்டிராவும் இடம்பெற்றிருக்கின்றன எனத் தரவுகள் தெரிவிப்பதாக, தி வயர் கூறியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் அதிக வேலை நாட்களை இழந்த மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தில், 16 வேலைநிறுத்தங்களால் 3.77 லட்சம் வேலை நாட்களை, கடந்த மூன்று ஆண்டுகளில்  இழந்துள்ளதாகவும், ஆனால் இதே காலத்தில் தனியார் துறையில் ஒரே ஒரு வேலை நிறுத்ததால், 1,049 நாட்கள் மட்டுமே இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை

இதனைத் தொடந்து, 9 வேலை நிறுத்தங்களால், 2.94 லட்சம் வேலை நாட்களை இழந்து அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் துறையில் அதிக வேலை நாட்கள் இழப்பாக 17 வேலை நிறுத்தங்களில் 7.67 லட்சம் வேலை நாட்கள் இழப்போடு கர்நாடகா முதலிடத்திலும், நாட்டிலேயே அதிக வேலை நிறுத்தங்களுடன் 49 வேலை நிறுத்தங்களால், 4.30 லட்சம் வேலை நாட்கள் இழப்போடு தமிழகம்  இரண்டாவது இடத்திலும் இருப்பதாக தி வயர் கூறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒட்டு மொத்தமாக, 41 வேலை நிறுத்தங்களால், 5.7 லட்சம் வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்