Aran Sei

அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 34 பேர் கொரோனாவால் மரணம் – வைரஸ் வகையை ஆய்வு செய்ய துணைவேந்தர் வேண்டுகோள்

லிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை சார்ந்த 34 பேராசிரியர்கள், கடந்த 18 நாட்களில் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளதாக, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் – ஒரே வாரத்தில் 5 பேராசிரியர்கள் மரணம்

உயிரிழந்தவர்களில் 16 பேர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், 18 பேர் ஓய்வு பெற்றவர்கள் என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு எழுதியுள்ள கடிதத்த்தில் துணைவேந்தர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

துணைவேந்தர் தாரிக் மன்சூர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “அலிகார் பல்கலைக்கழக பகுதிகளில் பரவி வரும் குறிப்பிட்ட வகை தொற்று கிருமியே இறப்புகளுக்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க தீவிரப்படுத்தப்பட்ட சட்டம் – கொரோனா தடுப்பிற்கு வெளிநாடுகள் உதவுவதில் சிக்கல்

மேலும், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தின் மூலம் மாதிரிகளை சேகரித்து, டெல்லியில் உள்ள மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்துக்கு வைரஸ் வகைமையை கண்டறிய அனுப்பியுள்ளதாகவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் 25 மருத்துவர்களும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்திருந்ததாகவும், அம்மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

‘கொரோனா பேரிடரில் ஒருங்கிணைந்து, கூட்டாக ஆலோசித்து இயங்குங்கள்’ – பிரதமருக்கு காங்கிரஸின் ஆறு ஆலோசனைகள்

அந்த மருத்துவ மனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடந்த 12 நாட்களில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரும் வெளியில் இருந்து பெறப்படவில்லை என்றும் மருத்துவமனை முதல்வர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்