Aran Sei

2024 நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைக்கும் தெலுங்கான முதல்வர் – விவசாய சங்க தலைவரோடு சந்திப்பு

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் தீவிரம் காட்டி வருகிறார்.

நேற்று(03.03.2022) , அவர் டெல்லியில் மதிய உணவுக்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயித் ஆகியோரை சந்தித்துள்ளார்.

தனது மகளும், கட்சியின் மூத்த தலைவருமான கே.கவிதா, அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கவுட், எம்.பி. ஜே.சந்தோஷ் குமார், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் வினோத் குமார் ஆகியோருடன் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். தெலுங்கானாவில் விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதித்ததாக திகாயத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து கே. . சந்திரசேகர் ராவ் கூறும்போது, அரசியல் பற்றி எந்த விவாதமும் நடைபெற இல்லை. இது முற்றிலும் விவசாயிகளின் நலன் சார்ந்தது. விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருக்கிறேன். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் போன்ற மாநில அரசின் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கும் இதேபோன்ற நிவாரணத்தை அறிமுகப்படுத்த மாநில முதல்வர்களை நான் சந்திக்கிறேன், ”என்று அவர் கூறியுள்ளார்

கடந்த மாதம் அவர் மும்பைக்கு செய்த பின்னர், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தார். ஏற்கனவே மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

source: newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்