Aran Sei

நீ தீவிரவாதியா என்று மட்டுமே கேட்டனர்

குடியுரிமை சட்ட திருத்தம் எதிர்ப்பு போராட்டத்துக்காக கைது செய்யப்பட்டு தீவிரவாதம் தொடர்பாக விசாரனைச் செய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார் உத்திர பிரதேச மாணவர் செயல்பாட்டாளர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காவல் துறையுடனான மோதலாக மாற்றியதற்கு காரணமாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஷார்ஜில் உஸ்மானி செப்டம்பர் 1ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற போராட்டம் தொடர்பாக மூன்று வழக்குகள் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியதாக  ஒரு வழக்கு என நான்கு வழக்குகள் ஷார்ஜில் உஸ்மானி மீது பதிவு செய்யப்பட்டன.

ஷார்ஜில் உஸ்மானியுடன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு மார்ச் 19ஆம் தேதியும் ஜூலை 29ஆம் தேதியும் பிணை வழங்கப்பட்ட நிலையில், உஸ்மானிக்கும் ஏற்கனவே இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ளதால், இனியும் அவரை சிறையில் வைத்திருப்பது தேவையற்றது என்று சிறப்பு நீதிபதி நரேந்திர சிங் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கல்வியில் சிறந்த மாணவராக இருந்தையும் சிறையில் அவர் இருந்த காலத்தையும் கருத்தில்கொண்டு பிணை வழங்கப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். சாட்சிகளை கலைக்கக் கூடாது மற்றும் விசாரணை நீதிமன்றம் அழைக்கும்போது, நேரடியாகவோ அல்லது வழக்குறைஞர் மூலம் ஆஜராக வேண்டும் என்று ஷார்ஜில் உஸ்மானிக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

போலீஸ் விசாரணை பற்றி ஷார்ஜில் உஸ்மானி குறிப்பிடுகையில், ”நான் உத்திர பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டேன்.. அவர்கள் என்னை தீவிரவாத வழங்குகள் தொடர்பாக மட்டுமே விசாரித்தனர்” என்று இந்து ஆங்கில நாளிதழுக்கு தொலைப்பேசி வழியாக தெரிவித்துள்ளார்.

விசாரணையின்போது, பத்து ஆண்டுகளுக்கு முன் இந்திய உளவுத்துறையினரால் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பியதாக ஷார்ஜில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்த நபர் தன்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்ற ஒரே அடிப்படையில் காவல்துறையினர் இதுபோன்ற கேள்விகளை கேட்டதாக தி இந்து ஆங்கில நாளிதழிடம் ஷார்ஜில் தெரிவித்துள்ளார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட ஷார்ஜிலிடம், காஷ்மீர் மாணவர்களுடன் நெருக்கமாக இருந்தது ஏன் என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பியதாகவும், போராட்டம் குறித்து காவல்துறையினர் எந்த கேள்வியையும் கேட்வில்லை என்று ஷார்ஜில் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்