Aran Sei

இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் – சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சு

ரும் பத்தாண்டுகளில் இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெறவில்லை என்றால் இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்று சாமியார் யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவுக்கு ஒரு இஸ்லாமியர் பிரதமராக வந்தால் 40% இந்துக்கள் கொல்லப்படுவர்’ – சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வன்முறை பேச்சு

இந்தியாவிற்கு இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வந்தால், அதற்கடுத்த 20 ஆண்டுகளில், இந்துக்கள் இல்லாத தேசமாக இந்தியா மாறும் என்றும், மேலும் இந்தத்துவாவை வளர்க்கும் வகையில், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரை மதுர-கோவிதன் பகுதியில் தர்ம சன்சத் நடத்தப்படும் என்று யதி நரசிங்கானந்த் தெரிவித்துள்ளார்.

2021 டிசம்பர் 17-19 தேதிகளில் ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்ட தர்ம சன்சத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள் பேசப்பட்டதாகக் கூறி, சாமியார் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடைபெற்ற இந்து மகாபஞ்சாயத்து: இஸ்லாமிய பத்திரிக்கையாளர்களை ஜிகாதி என கூறியதோடு, 7 பத்திரிக்கையாளர்களை தாக்கிய வலதுசாரியினர்

2022 ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் நடந்த இந்து மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பேசிய யதி நரசிங்கானந்த், இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவர்  பிரதமராக வந்தால் 50% இந்துக்கள் மத மாற்றப் படுவார்கள் 40% இந்துக்கள் கொல்லப்படுவார்கள், ஆகவே இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அந்நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்