Aran Sei

ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கும் கேரளப் பெண்கள் – நாடு திரும்ப அனுமதிக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவிப்பு

ஸ்லாமிய தேச உருவாக்குவதற்காக சென்று தற்போது ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள், மீண்டும் கேரளாவிற்கு திரும்ப அனுமதிக்க வாய்பில்லை என இந்திய ஒன்றிய அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 முதல் 2018 ஆம் ஆண்டில், இஸ்லாமிய தேசம் என்றழைக்கப்படும் கொரோசான் தேசத்திற்கு  கணவனுடன் இந்த நான்கு பெண்களும் பயணம் செய்தனர். அங்கு நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் அவர்களது அவர்களது கணவர்கள் உயிரிழந்ததை அடுத்து, 2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி, இவ்வாறு சரணடைந்த 13 நாடுகளை சேர்ந்த 408 பேர நாடு கடத்துவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஆப்கானிஸ்தான் அரசு பேசி வருவதாக, ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவர் அகமது ஜியா சராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க டெல்லியில் இருக்கும் ஆப்கன் அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், இந்த விசயத்தில் இந்தியாவின் பதிலிற்காக காத்திருப்பதாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு பெண்கள் நாடு திரும்பவது குறித்து அரசுகளிடையே  ஒருமித்த கருத்து இல்லை என்றும், அவர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

”அவர்களை திரும்ப வர அனுமதித்து இங்குள்ள வழக்குகளில், அப்ரூவராக மாற அனுமதிப்பது அல்லது பிரான்ஸ் நடைமுறையைப் பின்பற்றி, ஆப்கானிஸ்தான் அவர்கள்மீதான விசாரணையை மேற்கொள்ளச் செய்வது என இரு வழிமுறைகள் உள்ளன” என அதிகாரி கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கொரோசான் தேசத்திற்கு பயணம் செய்தததற்காக கேரளாவைச் சேர்ந்த 21 ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட குழுமீது தேசிய புலனாய்வு முகமை 2016 ஆண்டு வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஈரானில் இருந்து நடந்தே ஆப்கானிஸ்தானிற்கு பயணம் மேற்கொண்டனர் என குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்