Aran Sei

“இந்தியா பலமுறை சீன நிலப்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது” – வி.கே.சிங் கருத்தால் எழுந்த சர்ச்சை

இந்திய ராணுவம் பலமுறை எல்லை தாண்டி சீன நிலப்பரப்பிற்குள் நுழைந்திருப்பதாக, மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், ஒப்புக்கொண்டிருப்பதாக, சீன வெளியுறுத்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதுகுறித்து பேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங், எல்லைக்கோடு இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை, இந்தியா (ராணுவம்) பலமுறை தாண்டியதாகவும் கூறினார்.

“நம்முடைய பார்வையின் படி, நாம் எத்தனைமுறை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சென்றுள்ளோம் என்பது உங்களுக்கு தெரிவித்திருக்க முடியாது. சீன ஊடகங்கள் அதுகுறித்து செய்தி வெளியிடுவதில்லை” என்று தெரிவித்த வி.கே.சிங் “சீனா 10 முறை அத்துமீறியிருந்தால், நான் உறுதியாக சொல்கிறேன், நாம் 50 முறை அத்துமீறியிருப்போம்” என்று கூறினார்.

வி.கே.சிங்கின் இந்த கருத்தை சுட்டிக்காட்டியுள்ள சீனா, இந்தியா தொடர்ந்து அத்தமீறுவது இதன் மூலம் உறுதியாகியுள்ள என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பூட்டான் எல்லையில் சீனா உருவாக்கிய புத்தம் புதிய கிராமம் – என்ன நடக்கிறது?

இது குறித்து கருத்து தெரிவித்துளள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் “இது, இந்திய தரப்பில், அவர்களே அறியாமல் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்” என்றும் “வெகுகாலமாக, சீன நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில், இந்திய தரப்பு சீனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. தொடர்ச்சியாக, பிரச்சனையை எழுப்பியதுடன், மோதலையும் உருவாக்கியுள்ளது. இதுவே, இந்தியா-சீனா எல்லை பதற்றத்திற்கு அடிப்படை காரணமாகும்” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வி.கே.சிங் தெரிவித்த இந்த கருத்து, தற்போது சீன ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்பட்டு வருவதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதேபோல், பிரதமர் மோடி சீனா குறித்து தெரித்த கருத்து, சீன ஊடகங்களால் பெரிதாக வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “யாரும் நம்மை ஆக்கிரமிக்கவில்லை” என்று கூறினார்.

அந்த சமயம், கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவம் தனது ராணுவத்தை குவித்திருந்ததும், அதனால் இந்தியா-சீனா இடையில் எல்லையில் பதற்றம் நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்