Aran Sei

கொரோனா பாதிப்பால் மரணமடையும் பத்திரிகையாளர்கள்: உலகளவில் இந்தியா மூன்றாம் இடம்

லகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் பத்திகையாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஜெனிவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,79,257  பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.83 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் 2.04  லட்சத்துக்கும் மேற்பட்டோர்  மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,645  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் களத்தில் நின்று ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, மருத்துவமனையில் நடக்கும் குளறுபடிகள், கொரோனா மரணங்கள் என பல்வேறு செய்திகளைச் சேகரிக்கும், பத்திரிகையாளர்களில் மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைவதாக பிரஸ் எம்ப்ளெம் கேம்பய்னில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“பத்திரிகையாளர்களை தூக்கிலிட வேண்டும்” – நீக்கப்பட்ட வீடியோ : கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 114 பத்திரிகையாளர்கள் மரணமடைந்துள்ளனர் என்றும், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மட்டும், இந்தியாவில் 6 பத்திரிகையாளர்கள் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திக் கப்பான் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை – அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

இந்நிலையில், பிரேசிலில் 181 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பதாகவும், பெருவில் 140 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பதாகவும், இந்தியாவில்  114 பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பதாகவும் பிரஸ் எம்ப்ளம் கேம்பெய்னின் செய்தி கூறுகிறது.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

இதன் மூலம், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் பத்திரிகையாளர்கள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

இந்தியாவை பொறுத்தவரை மரணமடைந்துள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை மாறுபடலாம் எனவும் பிரபலமான செய்தி நிறுவனங்கள் சரியான தகவல்களை வழங்கவில்லை எனவும் பிரஸ் எம்ப்ளம் கேம்பய்ன் தெரிவித்துள்ளது.

திரிபுராவில் தாக்கப்படும் பத்திரிகையாளர்கள் – தொடரும் போராட்டங்கள்

மற்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு, மெக்சிகோ 106, இத்தாலி 52, பங்களாதேஷ் 51, கொலம்பியா 4, அமெரிக்கா 47, ஈக்வடார் 46, யுனைடெட் கிங்டம் 28, டொமினிகன் குடியரசு 27, பாகிஸ்தான் 25, துருக்கி 24, ஈரான் 21, ரஷ்யா 21, அர்ஜென்டினா 17, வெனிசுலா 17, பனாமா 16, ஸ்பெயின் 15, உக்ரைன் 14 ஆகியோர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்று பிரஸ் எம்ப்ளம் கேம்பய்ன்  செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆபத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள் – ஐபிஐ அறிக்கை

கடந்த 2021 ஆம் ஆண்டு, எல்லைகள் இல்லாத பத்திரிகையாளர்கள் அமைப்பு, ஊடகவியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் இந்தியா என்று  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்