Aran Sei

“கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவில் பலமான கட்டமைப்பு உள்ளது” : ஐ.நா சபையின் உதவியை நிராகரித்த இந்தியா

credits : the indian express

ந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உதவ முன் வந்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா நிராகரித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,79,257  பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.83 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் 2.04  லட்சத்துக்கும் மேற்பட்டோர்  மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,645  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பையே ஆட்டிப்படைத்திருக்கும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவுக்கு உதவ முன் வருவதாக தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுங்கள் அல்லது பதவி விலகுங்கள் –  பிரதமர் மோடிக்கு சீதாராம் யெச்சூரி கண்டனம்

இது தொடர்பாக ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ”இந்தியாவுக்கு தேவைப்பட்டால் ஐ.நாவின் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை (Integrated Supply Chain Management) வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.  இந்தச் சூழலை எதிர்கொள்ள இந்தியாவில் பலமான கட்டமைப்பு இருப்பதால், இந்த உதவி தேவையில்லை என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், எங்களுடைய அறிவிப்பை நாங்கள் திரும்பப் பெறவில்லை. எங்களால் இயன்ற அளவுக்கு இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளதாக தி ட்ரிபியூனின் செய்தி கூறுகிறது.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

ஐ.நா. சபையிலிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் ஏதேனும் இந்தியாவுக்கு செல்ல உள்ளதா என்ற எழுப்பபட்ட  கேள்விக்கு, “இதுவரை எதுவும் அனுப்படவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல், நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். எங்களுடன் தொடர்பில் இருக்கும் பலர் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் மூலம் உதவிகளை எங்களால் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.

வரி மற்றும் வலதுசாரி அரசியலால் இந்தியாவை விட்டு வெளியேறும் செல்வந்தர்கள் – பிபிசி

மேலும், ஐ.நா சபை இந்தியாவின் நிலைகுறித்து ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தியிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் ஹக் தெரிவித்துள்ளார்.

ஹரித்வார் கும்பமேளா: ‘இது தப்லிக் ஜமாத் அல்ல; கங்கை மாதாவின் ஆசிர்வாதத்தால் நமக்கு கொரோனா வராது’ – பாஜக முதல்வர்

ஐ.நா சபையின் தலைவர் வோல்கன் பொஸ்கீரும் இந்தியாவுக்கு உதவி செய்ய குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக வோல்கன் பொஸ்கீரின், செய்தி தொடர்பாளர், ”கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கி உதவி செய்த இந்தியாவுக்கு தற்போது உலக நாடுகள் உதவ முன் வர வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்