Aran Sei

ஜனநாயக குறியீடு: 53வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா – 6 ஆண்டுகளில் 26 இடங்கள் பின்னடைவு

தி எக்னாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட் (The Economist Intelligence Unit – EIU) என்ற அமைப்பு, வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில், இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து, 53வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் “ஜனநாயக பின்வாங்கல்”, சிவில் உரிமைகள்மீதான ”ஒடுக்குமுறைகள்” ஆகியவை இந்தியாவின் தரவரிசையை பாதித்ததாக, அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் இந்தியா தனது அண்டை நாடுகளைவிட மேலே உள்ளது.

இந்தியா, 2019 ஆம் ஆண்டு பெற்றிருந்த 6.9 மதிப்பெண்களிலிருந்து குறைந்து, 2020 ஆம் ஆண்டில்,  6.1 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

“இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள்மீது பெருகிவரும் அழுத்ததின் காரணமாக, 2014 ஆம் ஆண்டில் 7.92 மதிப்பெண்களுடன் 27 வது இடத்திலிருந்த இந்தியா, 2020 ஆண்டில் 6.61 மதிப்பெண்களாகக் குறைந்து, 53 வது இடத்திற்கு சரிந்துள்ளது” என அந்த அமைப்பு கூறுகிறது.

குடியரசு தின டிராக்டர் பேரணி மோதல் – நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்

தி எக்னாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட் அமைப்பின் ”நோய் மற்றும் ஆரோக்கியத்தில் ஜனநாயகம்?”, என்று பெயரிடப்படுள்ள குறியீட்டில், முதல் ஐந்து இடங்களில் நார்வே, ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

23 முழு ஜனநாயக நாடுகள், 52 குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள், 35 கலப்பு ஜனநாயக நாடுகள் மற்றும் 57 சர்வாதிகார நாடுகள் எனப் பட்டியலிடப்பட்ட 167 நாடுகளை உள்ளடக்கிய ஜனநாயக குறியீடு பட்டியலில், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் ஆகிய நாடுகளுடன், ’குறைபாடுள்ள ஜனநாயகம்’ உள்ள நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதானிக்கு ஆதரவான பழைய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம் – இலங்கை அரசு அறிவிப்பு

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்திய குடியுரிமைக்கு மதரீதியான அடையாளங்களைக் கொடுக்க முயற்சித்திருப்பதால்,  இந்திய அரசின் மதச்சார்பின்மையை குறைவாக மதிப்பிடப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்தள்ளது.

இந்தியாவின் அண்டைநாடுகளில், குறைபாடுள்ள ஜனநாயக நாடாக இலங்கை 68வது இடத்திலும், கலப்பு ஜனநாயகம் கொண்ட நாடுகளில் வங்கதேசம், பூடான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 76, 84, 105 ஆகிய இடங்களிலும், சர்வாதிகார நாடாக ஆப்கானிஸ்தான் 139 இடத்திலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

Sources : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்