Aran Sei

செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் – 46 நாடுகள் கொண்ட பட்டியலில் 31வது இடத்தில் இந்தியா.

செய்திகளின் நம்பகத்தன்மை தொடர்பாக 46 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் 31வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியாவில் வெளியாகும் செய்திகளை 31 விழுக்காட்டினர் மட்டுமே நம்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் டிஜிட்டல் நியூஸ் அறிக்கை 2021 என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், 65 விழுக்காடு நம்பகத்தன்மையுடன் பின்லாந்து முதலிடத்திலும், 29 விழுக்காடு நம்பகத்தன்மையும் அமெரிக்கா 46வது இடத்தையும் பிடித்துள்ளன.

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள நடத்தப்பட்ட கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 10வது முறையாக வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கையில் இந்தியா இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு, ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் ஜர்னலிசம் உடன் சென்னையில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் ஒத்துழைத்துள்ளது.

காவல்துறை தாக்கியதில் வியாபாரி உயிரிழந்ததாக புகார் – கைதுசெய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்

செய்திகளை ஸ்மாட் போன்களில் அறிந்து கொள்ளும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 73 பேர் செய்திகளை ஸ்மார்ட்போன்களின் வழியே அறிந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பதிலளித்தவர்களில் 82 விழுக்காட்டினர் ஸ்மார்போன் மூலம் செய்திகளை அறிந்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

அச்சு ஊடகம் மற்றும் அரசாங்கம் ஒளிபரப்பும் செய்திகளையே அதிக மக்கள் நம்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பின்றி வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – பாதுகாப்பின்றி மக்கள் அவதியுறும் அவலம்

மேலும், கொரோனா தொற்றால், விளம்பர வருவாய் மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்தது, வேலை இழப்பு மற்றும் சம்பளக் குறைப்புகள் காரணமாக அச்சு ஊடகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்