Aran Sei

ஒன்றிய அரசை விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள் – இந்தியாவின் கருத்தை தெரிவிக்க பன்னாட்டு தொலைக்காட்சி தொடங்க தூர்தர்ஷன் திட்டம்

ந்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் ‘இந்தியாவின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில்’ டிடி இன்டர்நேஷனல் என்ற புதிய தொலைக்காட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து பன்னாட்டு ஊடகங்களில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”உங்கள் முகத்தைத் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சியில் காட்டுவதால் கொரோனா ஒழியாது” – பிரதமர் மோடிக்கு சித்தராமையா கண்டனம்

மேலும், இந்தத் தொலைக்காட்சி தொடங்குவது தொடர்பாக முழுமையான அறிக்கையைத் தயாரிக்க ஆலோசனை வழங்கும் நிறுவனங்களை முன்வருமாறு கேட்டிருப்பதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனை வழங்க முன்வரும் நிறுவனத்தின் அறிக்கையில், பன்னாட்டளவில் இந்தியாவின் குரலை எதிரொலிக்கும் வகையில், கொரோனாவை மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கையாளுவது குறித்து பன்னாட்டு ஊடகங்கள் கூறும் விமர்சனங்களுக்கு எதிராக இந்தியாவின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் செயல்படும்” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

அமெரிக்க வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் வலதுசாரி ஆதிக்கம் – பகுதி 2

அதுமட்டுமல்லாது, தூர்தர்ஷனின் உலகளாவிய இந்த அணுகுமுறை முதலில் பன்னாட்டு செய்தி ஒளிபரப்பு நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் வழியாக “பிரச்சார் பாரதி” மின்னனு தளம் வழியாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்