Aran Sei

இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதே என் கனவு – நோபல் பரிசு பெற்ற மலாலா கருத்து 

இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புடன் இருப்பதை காண்பதே தனது கனவு என, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட மலாலா இதைத் தெரிவித்துள்ளார்.

எல்லைகள் மற்றும் பிளவுகளைக் கொண்ட பழைய தத்துவம் இனி பலனளிக்காது எனவும்  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும் எனவும் மலாலா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவாக இருந்தாலும், பாகிஸ்தானாக இருந்தாலும், சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாப்பு வேண்டும் என்றும், இது மதத்துடன் தொடர்புடையது அல்ல, ”அதிகாரத்தை சுரண்டுவது தொடர்பானது”, எனவே இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மலாலா கூறியுள்ளார்.

வலது சாரி மேடையில் மீண்டும் டிரம்ப் – தொடரும் வலுவான ஆதரவும், வெறுப்பு பிரச்சாரமும்

இந்தியாவில் இணைய சேவை முடக்கப்படுவதும், அமைதியான முறையில் போராடி வருபவர்கள் கைது செய்யப்படுவதும் கவலை அளிக்கிறது என்றும், மக்கள் பிரச்னைகள் கேட்கப்படுவதை இந்தியா உறுதி செய்யும் என நம்புகிறேன் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

”இந்தியாவும் பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக இருப்பதை காண்பதே எனது கனவு. பிறகு, இரு நாட்டினரும் இன்னொரு நாட்டிற்கு சுலபமாக பயணப்பட முடியும். இந்தியர்கள் பாகிஸ்தானின் நாடகங்களைக் கண்டு ரசிக்கலாம், நாங்கள் (பாகிஸ்தானியர்கள்) பாலிவுட் திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம்” என மலாலா கூறியுள்ளார்.

”சிறுபான்மையினர் ஆபத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் இதர சிறுபான்மையினர்கள்… பாலஸ்தீனியர்கள், ரோகிங்யா அகதிகள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்படுவதில்லை. . இது மதம் தொடர்புடையதல்ல, அதிகாரம் மற்றும் சுரண்டல் தொடர்பானது, இது ஏழை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான உயர்வகுப்பினருக்கானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம் உயருமா? – கோடிகளில் ஊதியம் பெறும் அமெரிக்க தலைமை நிர்வாகிகள் மீது விமர்சனம்

“உலகளவில் ஓவ்வொரு நாட்டிலும் இருக்கும் சிறுபான்மையினருக்கு  பாதுகாப்பு தேவை. அவர்களுக்கு ஆதரவாக குரல் மற்றும் பாதுகாப்பு தேவை, இதை மனித உரிமை அமைப்புகள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அரசாங்கத்திற்கு நினைவூட்ட வேண்டும்” என மலாலா தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்