பிரதமர் மோடி தலைமையிலான அரசில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சதி செய்வதாக உணரப்பட்டாலோ அல்லது அது போன்ற சூழல் நிலவினோலோ, இந்தியா ராணுவ தாக்குதல்களை நிகழ்த்துவது, கடந்த காலங்களை விட அதிகரித்திருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக போர் நடக்கவில்லையென்றாலும், இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை தொடர்ந்து அதிகரித்தும் தீவிரமடைந்தும் வருகிறது என்று அமேரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறை அலுவலகம், அரசாங்கத்திடம் சமர்பித்துள்ள வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 345 மீனவர்கள் – குஜராத் அரசு தகவல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக சதி செய்கிறது என்று உணர்ந்தாலோ அல்லது இந்தியாவை பாகிஸ்தான் தூண்டினாலோ, இந்தியா கடந்த காலங்களை போல் அல்லாமல் உடனடியாக ராணுவ தாக்குதல் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், இந்த நிகழ்வுகள் அணு ஆயுதம் வைத்திருக்கும் இரண்டு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிந்து நதிநீர் பங்கீடு – இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் ஆணையர்களின் சந்திப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுடைய தலைநகரங்களில் இருந்த துணை தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் தலையீடு – இந்திய வெளியுறவுத் துறை மௌனம்
பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடனான சாதாரண அண்டை நாடு என்ற உறவை இந்தியா பேண விரும்புவதாகவும், இந்தச் சூழலை (பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழல்) உருவாக்குவதற்கான பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று இந்தியா கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நடைபெறும் சண்டைகள் அமெரிக்கப் படைகளுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள், உலகுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.