Aran Sei

பேரழிவைச் சந்திக்கும் சுற்றுச்சூழல் – உக்ரைனில் தாக்கப்பட்ட அணுமின் நிலையம் குறித்து இந்தியா எச்சரிக்கை

க்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலானது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பிரச்சனைகளை உருவாக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

உக்ரைனின் ஜாபோரிசியா நகரில் அமைந்துள்ள அணுமின் நிலையமானது ஐரோப்பாவில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களில் ஒன்றாகும்.

நேற்று (மார்ச் 4), இந்த அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ரஷ்ய நாட்டின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. தரைவழியாக நுழைந்த ரஷ்ய இராணுவம் ஜாபோரிசியா அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது.

உக்ரைனில் சுடப்பட்டவருக்கு உதவிக்கு வராத இந்தியத் தூதரகம் – பெற்றோர் குற்றச்சாட்டு

இத்தாக்குதலைத் தொடர்ந்து, அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 15 நாடுகளைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரகால கூட்டம் நடைபெற்றுள்ளது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசியபோது, “அணு உலைகளில் ஏற்படும் விபத்துகள் பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது”  என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரியில் அனுமதியுங்கள் – மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை

மேலும், “உக்ரைனின் அணுசக்தி உலைகளின் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்களை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது. அவ்வகையில், ஜாபோரிசியா அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதலையும் கவனத்தில் கொண்டுள்ளது” என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்