Aran Sei

ஆங்கிலேயருக்கு எதிரான இஸ்லாமியர்களின் ‘மொப்லா கலகம்’ சுதந்திரம் போராட்டம் அல்ல – ஆர்.எஸ்.எஸ் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராம் மாதவ் கருத்து

”கேரளாவில் 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற மாப்பிலா கலவரம் என்றழைக்கப்பட்டும் மோப்லா கிளர்ச்சி, இந்தியாவில் தாலிபன் மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு. ஆனால், அதை ஒரு கம்யூனிச புரட்சியாக கொண்டாடுவதன் மூலம், அதை மூடி மறைக்கக் கேரள இடது சாரி அரசு முயற்சிக்கிறது” என ஆர்.எஸ்.எஸ் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

1921ல் நடைபெற்ற கிளர்ச்சியின்போது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில், கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

’சரியான வரலாறு’ பற்றித் தேசிய தலைமைக்குத் தெரியும், எனவே காஷ்மீரோ அல்லது கேரளமோ, நாட்டில் வன்முறையை உருவாக்கவோ அல்லது மக்களைப் பிளவுபடுட்தவோ, தாலிபானிய அல்லது பிரிவினைவாத சக்திகளுக்கு, எந்த இடத்தையும் அது வழங்காது என ராம் மாதவ் கூறினார்.

”தற்போது உலகெங்கிலும் உள்ளவர்கள் கவனம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றித் தாலிபான்கள்மீது தான் உள்ளது. கடந்த காலத்திலும் தற்போதும் தாலிபான்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து செய்தி ஊடகங்கள் அவர்களுக்கு நினைவூட்டி வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறெனும், சில அடிப்படைவாத தீவிரவாத இஸ்லாமிய சித்தாந்ததில் இருந்து பிறந்த இந்தத் தாலிபான் மனநிலை, முதலில் மொப்லா கிளர்ச்சியின் வடிவத்தில் இங்கு வெளிப்பட்டதால், இந்தியாவிற்கு இது ‘புதிய கதை’ அல்ல என்று அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது இழைக்கப்பட்ட மிருகத்தனங்களும், வன்முறைகளும் பலருக்கும் தெரியாத நிலையில், அதை மாற்ற அலல்து மறைக்க இடது சாரி அரசாங்கம் முயன்று வருகிறது. மேலும், கலகத்தின் தலைவர்களை ’கதாநாயகர்கள்’ எனறு வெளிப்படுத்தும் திரைப்படங்களின் தயாரிப்பை ஊக்குவிப்பதன் மூலம், ஆங்கிலேயர்கள் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சியாக அதை கொண்டாடிக் கொண்டிருந்தது” என ராம் மாதவ் வாதிட்டார்.

”கேரளாவில் ஒரு இடது சாரி அரசாங்கம் உள்ளது. அவர்கள் அதை (மொப்லா கலகம்) ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு இயக்கம் அல்லது முதலாளித்துவ அல்லது ஜமீன்தார்களுக்கு எதிரான ஒரு கம்யூனிச புரட்சியாகவோ முன்வைக்க முயற்சிக்கின்றனர்.

அவர்கள் அதை முற்றிலும் வேறு விதமாக கொண்டாட விரும்புகிறார்கள். கிளர்ச்சித் தலைவர்களின் ’வீரம்’ குறித்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இடது சாரி தாராளவாத குழு, அதை (மொப்லா கலகம்) மூடிமறைக்க முயற்சிக்கிறது. இடது சாரிகள் வரலாற்றைத் திரிப்பவர்கள் என உலகம் முழுவதும் அறியப்பட்டிருகிறது. இது அவர்கள் மரபணுவிலேயே உள்ளது. ”என குற்றம்சாட்டினார்.

”அப்போது உருவான தாலிபானிய மனநிலை தான் 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியப் பிரிவினை வாதத்திற்கு காரணம். இந்த மனநிலையின் மற்ற வெளிப்பாடுகள் தான் 1946 ஆம் ஆண்டு வங்காளத்தில் இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் பின்னர் காஷ்மிரில் பண்டிட்களுக்கு எதிராக நடந்த அட்டூழியங்களில் காணப்பட்டன” என மாதவ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய பதிவுகள்:

இந்தியாவுடனான வணிகத்தை நிறுத்திய தாலிபான்கள் – எப்.ஐ.இ.ஒ அமைப்பு தகவல்

பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க வேண்டும் – தமிழ்நாடு அரசிடம் திருமாவளவன் கோரிக்கை

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமான? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்