Aran Sei

மத்திய பிரதேசம்: இஸ்லாமியர்களின் வீடுகளையும் மசூதிகளையும் எரித்த இந்துத்துவாவினர் – வேடிக்கைப் பார்த்த காவல்துறை

Credit: Al Jazeera

ந்துக்களின் பண்டிகையான ராம நவமி தினத்தன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.

ஞாயிற்கிழமை (ஏப்ரல் 10) குஜராத், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

’ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் கோஷமாக மாற்றப்பட்டு விட்டது

மத்திய பிரதேச மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கார்கோன் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான வீடுகளில் கல்வீசி தாக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ன. சில மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. சில மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான கடைகள் புல்டோசர் வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.

தாக்குதல் தொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கவோ, கைது செய்யவோ முயற்சிக்காமல், அங்கு நடைபெறுவதை வேடிக்கை பார்க்கும் சாட்சி வீடியோக்களில் பதிவாகியுள்ளது.

முன்னதாக இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் டெல்லியைச் சேர்ந்த பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா பேசியுள்ளார். அதன் பிறகே கார்கோன் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

டெல்லி கலவரம் தொடங்குவதற்கு முன்பாக கபில் மிஸ்ரா, இதே போன்ற இஸ்லாமிய வெறுப்பு பேச்சுக்களை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதே போன்று சரங்க்பூர் பகுதியில், மசூதிக்கு வெளியே ஆயிரக்கணக்கான இந்துத்துவாவினர் ஆயுதங்களுடன் உள்ளே இருக்கும் இஸ்லாமியர்களை மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பலத்த ஒலியுடன் பாடல்கள் ஒலிக்க விட்டு அவர்கள் ஆட்டம் போடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.

Source: Al Jazeera

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்