Aran Sei

ரோகிங்கியா சிறுமியை நாடு கடத்தும் இந்தியா – நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையம்

மியான்மரிலிருந்த அகதியாக வந்த 14 வயது ரோகிங்கியா சிறுமியை நாடு கடத்தும் இந்தியாவின் முடிவிற்கு ஐநா அகதிகள் முகமை மற்றும் மனித உரிமை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை மறுக்கப்பட்டு மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியாக்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவில் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கூறி மோடி அரசு அவர்களைக் கைது செய்திருப்பதோடு, நாடு கடத்தவும் முடிவு செய்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக மியார்மரை சேர்ந்தவர் என அந்நாட்டு உறுதியளித்திருக்கும் 14 வயது சிறுமியை மீண்டும் அந்நாட்டிற்கு அனுப்பு முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவருகிறது.

கட்டாய மதமாற்றம் எனக்கூறி கேரள கன்னியாஸ்திரிகளை மிரட்டிய விவகாரம் – இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது

சிறுமி்யின் குடும்பத்தினர் வங்கதேச நாட்டின் காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நிலையில், சிறுமியை மியான்மருக்கு நாடுகடத்தும் முயற்சியில் இந்தியா அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கான எழுத்துப்பூர்வ வேலைகளை அசாம் அரசு மேற்கொண்டிருக்கிறது.

சிறுமி நாடு கடத்துதல் தொடர்பாக அசாம் காவல்துறை அதிகாரி பி.எல்.மீனா, “இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது முன்னரே திட்டமிடப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தகவலையும் திரட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

அசாமின் சில்சார் நகரில் உள்ள நிவேதிதா நாரி சங்ஷ்தா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திபா ராய் கூறுகையில், மியான்மரில் குடும்பம் இல்லை என உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மியான்மருக்கு அனுப்பப்படவுள்ளார்”  என கூறினார்,

இந்த வாரம் உள்ளூர் போலீசாரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைக்குமாறு மத்திய அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு உத்தரவுகள் வந்தன. “நாங்கள் கட்டளைக்கு மட்டுமே கீழ்ப்பட்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிரான சீக்கிய அமைப்பின் தீர்மானம் – கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் பதில் அளிக்கவில்லை.

“மியான்மரின் நிலைமை இன்னும் பாதுகாப்பாக நிலையான முறையில் திரும்புவதற்கு இன்னும் சரியானதாக இல்லை. மேலும், குழந்தையை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் உடனடியாக அவரை ஆபத்தான சூழ்நிலைக்கு உள்ளாக்கலாம்”, என ஐநா அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பஞ்சாபில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 விவசாயிகளை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு காஷ்மீரின் வடக்கு பகுதியில் கடந்த மாதம் 150க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளை கைது செய்த காவல்துறையினர், அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

அகதிகளை ஆபத்துக்கு உள்ளாகச் செய்யும் இடத்திற்கு திருப்பி அனுப்புதல் என்ற கொள்கையை மீறும் ஐ.நா.வின் நிலைப்பாட்டை இந்தியா நிராகரிக்கிறது.

Source : Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்