Aran Sei

வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புங்கள் – மியான்மருக்கு இந்தியா, ஜப்பான் பிரதமர்கள் அழைப்பு

Credit: NDTV

மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என  இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ வெளியிட்டிருக்கும் கூட்டு அறிக்கையில், மியான்மர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர்.

ராணுவத்தினரால் கைது செய்யப்படிருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இரு நாட்டு பிரதமர்கள், மியான்மரில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் நிலவி வரும் அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) எடுத்து வரும் முயற்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

மியான்மர் விவகாரத்திற்கு தீர்வு காணும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின்  (ஆசியான்) முயற்சிளுகக்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில் ஆசியானின் தலைவராக கம்போடியா செயல்படுவதை வரவேற்கிறோம். ஆசியானின் ஐந்து அம்ச கருத்தை அவசரமாக செயல்படுத்த மியான்மரை கேட்டுக் கொள்கிறோம்என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1 தேதி மியான்மரில், ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதில் இருந்து தற்போது வரை பாதுகாப்பு படையினரால் 1,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரசியல் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.

ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, 5 லட்சம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்காணோர் தாய்லாந்து மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர் என ஐநாவின் மனித உரிமைக்கான உயர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் விரிவான கூட்டு அறிக்கையில் உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள், இந்தோபசிபிக் கடல்வழி அணுகல், குறிப்பாக தென் சீனக் கடல், இருதரப்பு பொருளாதார கூட்டாண்மை மற்றும் கோவிட்க்கு பிந்தைய உலகில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல சிக்கல்களை எடுத்துரைத்துள்ளனர்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்