இந்தியா – இஸ்ரேல் உறவுகளில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்குப் பதிலாக, புதிய அதிநவீன பெகாசஸ் உளவு செயலி ஏதேனும் உள்ளதா என்று இஸ்ரேலிடம் இந்தியா கேட்க இதுவே சிறந்த நேரம். 2024 தேர்தலுக்கு முன்பாகவே அது கிடைத்தால் இஸ்ரேலுக்கு 4 பில்லியன் டாலர்கள் கூட கொடுக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகஸிஸ் உளவு செயலி மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்கக் கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும். செயலியைக் கொண்டு உளவு பார்ப்பது தேசத்துரோகம் என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்தியா-இஸ்ரேல் இடையே 30 ஆண்டுக்கால தூதரக உறவுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 29 அன்று ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் இந்தியா-இஸ்ரேல் உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது என்று நரேந்திர மோடி பேசியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.