Aran Sei

உலகில் குழந்தை திருமணம் செய்யும் மூன்றில் ஒருவர் இந்தியர் – யுனிசெஃப் தகவல்

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, உலகின் மொத்த குழந்தை திருமணத்தில், 50 விழுக்காட்டிற்கு மேல், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் நடப்பதாக தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று, குழந்தை திருமணத்திற்கு எதிரான முன்னேற்றத்திற்கான ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் 2030 ஆம் ஆண்டிற்குள், 1 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

உலகில் தற்போது, உயிருடன் இருக்கும் பெண்களில் 65 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்றும் அதில் 50 விழுக்காடு திருமணங்கள் வங்காளதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் நைஜீரியாவை சேர்ந்தவர்களுக்கு நடைபெற்றுள்ளது என்றும் யுனிசெஃப் ஆய்வில் தெரியவந்துள்ளது.

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

கடந்த பத்தாண்டுகளில் 2.5 கோடி குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெற்றி, தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

தனது முந்தைய அறிக்கையை மேற்கோள் காட்டியுள் யுனிசெஃப், உலகில் குழந்தை திருமணம் நடைபெற்றவர்களில் மூன்றில் ஒருவர், இந்தியாவில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

’மோடி பெயரை இந்தியாவுக்கு சூட்டும் நாள் வெகுவிரைவில் வரும்’ – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

18 வயதிற்கு முன் ஒரு பெண் திருமணம் செய்துவதற்கும், அவரது குடும்ப பின்னணிக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. கிராமப்புறப் பகுதிகள் அல்லது ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண்கள், அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் குழந்தை மணப்பெண்களில் அதிகம் பேர், குறைவாக அல்லது கல்வி இல்லாதவர்களில் இருக்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குழந்தை திருமண ஒழிப்பு முயற்சிகள் கோவிட் 19 தொற்று மீட்பு திட்டங்களுடன்  ஒருங்கிணைக்கப்படுவது அவசியம். சுகாதார, கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது ஏற்படுத்தப்படும் எதிர்மறை தாக்கத்தை தடுக்க, ஒரு அணுகுமுறை அவசியமாகிறது,” என யுனிசெஃப் இந்தியாவின் பிரதிநிதி, யாஸ்மின் அலி ஹக் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்