Aran Sei

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் நெஞ்சை உலுக்கக்கூடியதாக உள்ளது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வருத்தம்

ந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையில் தொற்று எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருவது நெஞ்சை உலுக்கக்கூடியதாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெட்ராஸ் அதாநோம் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அவர், “இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவருவதால் மருத்துவமனைகளும் மயானங்களும் அதன் முழு  அளவில் நிரம்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் – போலியான செய்தியென உலக சுகாதார நிறுவனம் தகவல்

மேலும், “கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆக்சிஜன் வேண்டியும், படுக்கை வசதியுள்ள மருத்துவமனைகள் வேண்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பார்க்கமுடிந்தது. அதுமட்டுமின்றி அவர்கள் டெல்லியில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த சொல்லி வற்புறுத்தியதையும் பார்க்க நேர்ந்தது” என்று டெட்ராஸ் அதாநோம் கூறியுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையால் 50 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் – போலியான செய்தியென உலக சுகாதார நிறுவனம் தகவல்

இந்நிலையில், இந்தியா கொரோனா தொற்றிலிருந்து மீள உலக சுகாதார நிறுவனம், அவசர மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்காலிக மருத்துவமனை அமைத்தற்கான கருவிகள், ஆய்வக உபகாரங்கள் ஆகியவை உட்பட தங்களால் முடிந்த எல்லா உதவியையும் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்

மேலும், உலகெங்கிலும் காசநோய் மற்றும் போலியோ உட்பட இதர நோய் கட்டுப்பட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள 2600 க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு அனுப்ப உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதாநோம் அறிவித்துள்ளார்.

source; ndtv

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்