Aran Sei

அமெரிக்க பொருளாதார தடை: ஈரான் எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்; முடிவுக்கு வரும் இந்தியா,ஈரான் வர்த்தகம்

credits : the economic times

ரானின் ரூபாய் இருப்பு குறைந்து வருவதால் இந்திய வணிகர்கள் அரிசி, சர்க்கரை மற்றும் தேநீர் போன்ற பொருட்களுக்காக ஈரானிய வணிகர்களுடன் புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக, ஆறு தொழிற்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஏற்றுமதியாளர்கள் ஈரானுடன்  வியாபாரம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார்கள். ஏனெனில் மாதக் கணக்கில் பணம்  வர தாமதமாகிறது” என்று உலகளாவிய வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் ஒரு ஏற்றுமதியாளர் கூறியுள்ளார்.

இந்தியாவில் யூகோ மற்றும் ஐடிபிஐ வங்கி,  ஈரானின் ரூபாய் இருப்புகளை வைத்துள்ளது. ரூபாய் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு அங்கீகாரம் பெற்ற இந்த இரண்டு வங்கிகளிலும் ஈரானின் ரூபாய் இருப்பு குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் புதிய ஏற்றுமதிக்கு, சரியான நேரத்தில் பணம் கிடைக்குமா என்று உறுதியாக தெரியவில்லை என்று வணிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளியேறும் டிரம்ப் – முடிவுக்குவரும் ஏகபோகம் – விரைவில் ஈரான் எண்ணெய்

ஈரான் மீது அமேரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால், எண்ணெய் விற்பனையை பரிவர்த்தனை செய்ய, அமெரிக்க டாலர்களை ஈரானால் பயன்படுத்த முடியவில்லை. முன்னர், இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையில் ரூபாய்க்கு ஈடாக எண்ணெய் விற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்திய ரூபாயை பயன்படுத்தி, ஈரானில் எண்ணெய் வாங்கப்பட்ட சூழ்நிலையில், அந்த ரூபாயை யன்படுத்தி,  விவசாய பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை இந்தியாவிலிருந்து ஈரான்  இறக்குமதி செய்யது கொண்டது. அந்தவகையில்,
ஈரானிடமிருந்து அதிக எண்ணய் வாங்கும் நாடுகளின் பட்டியலில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை – இஸ்ரேலைப் பழிவாங்குமா ஈரான்?

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, அணு ஆயுத தடை ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது டிரம்ப் பொருளாதார தடை விதித்தார்.  இதைத்தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மே மாதம் முதல், ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொண்டது.

கண்காணிப்பு பட்டியலில் வரியிலா சொர்க்கம் கேமன் தீவுகள் – இந்தியாவுக்குள் வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்கப்படுமா?

இருந்தபோதும், ஈரான் ஏற்கனவே இருப்பில் இருந்து ரூபாயை கொண்டு, இந்தியாவில் இருந்து பொருட்களை  தொடர்ந்த இறக்குமதி செய்தது. ஆனால், 22 மாதங்களாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யாத நிலையில், ஈரானின் ரூபாய் இருப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ரூபாய் இருப்பு கணிசமாக குறைந்துவிட்டது என்றும் “வர்த்தகம் நிறுத்தப்பட்டதால், ஈரானின் ரூபாய் இருப்பு விரைவில் முடிந்துவிடும்” என்றும் ஐடிபிஐ வங்கியின் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்