Aran Sei

கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவி – அனுமதியளித்த இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்

கொரோனா தொற்றைக் கண்டறிய சுய பரிசோதனை கருவிக்கு இந்தியா மருத்துவ ஆய்வுக் கழகம்(ICMR) அனுமதியளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மைலாப் டிஸ்கவரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த துரித ஆன்டிஜென் பரிசோதனைக் கருவிக்கு ‘கோவிஸெல்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கருவி என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கொரோனா பரிசோதனை மையங்கள்: நடவடிக்கை எடுக்க பினராயி விஜயன் உத்தரவு

ஐசிஎம்ஆர் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் படி கொரோனா தொற்று அறிகுறிவுள்ளவர்களும், தொற்றுக்கு உள்ளானவர்களும் இந்த பரிசோதனைக்கருவியின் வழியே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைக்குச் தொற்று அறிகுறிவுள்ளவர்களின் மாதிரியைச் சேகரிக்க வேண்டியதில்லை என்றும், ஆனால் நோய் அறிகுறிவுள்ளவர்கள் சுயபரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றால் மீண்டும் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு – சுகாதாரத்துறை அழைப்பால் சர்ச்சை

மேலும், இந்த பரிசோதனைக் கருவியுடன், சோதனைக் கருவியும், பரிசோதனைக்குப் பிறகு பாதுகாப்பாக கையாளும் பையும் இடம்பெறும் என்றும், பரிசோதனை முடிவுகளை 15 நிமிடத்தில் அறிய இயலும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, பரிசோதனையில் நோய் தொற்று உறுதியாகாமல், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் – டெல்லி, ஒடிசா, குஜராத் அரசுகள் அறிவிப்பு

இதுகுறித்து தெரிவித்துள்ள மைலாப் டிஸ்கவரி நிறுவனத்தின் தலைவர், இந்த பரிசோதனை மைலாப் செயற்கை நுண்ணறிவு செயலி வழியே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வழியாக முடிவுகளை எளிதாக அறியலாம் என்றும், பரிசோதனை முடிவுகளை ஐ.சி.எம்.ஆர்க்கு நேரடியாக அனுப்பி கண்காணிக்க எளிதாகப் பயன்படும் வகையிலும், முடிவுகளுக்குப் பின் வழிகாட்டு வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பரிசோதனை கருவியின் விலை ரூபாய் 250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்