Aran Sei

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் – ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியல்

சியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்திருந்த சீனாவின் ஜாக் மா -வை பின்னிற்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.

ஃபோர்ப்ஸ் இதழில் உலகின் பெரும் பணக்காரர்களுக்கான 35வது ஆண்டு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அதிக பெரும்பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பேசோஸ். கடந்த ஆண்டு 6,400 கோடி அமெரிக்கா டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டு 17,700 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

சமூகநீதி காக்க பங்காற்றிய அறிஞர் வே.ஆனைமுத்து மறைந்தார் – திருமாவளவன் இரங்கல்

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 705 விழுக்காடு வளர்ச்சியடைந்ததை அடுத்து 15,100 கோடி  அமெரிக்கா டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க். இவர் கடந்த ஆண்டு 2,460 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 31 வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செக் மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட சரத்குமார், ராதிகா சரத்குமார் – ஒராண்டு சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி,  கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி உதய் கோடக், ஆர்சிலர் மிட்டலின் நிர்வாக இயக்குனர் லக்‌ஷமி மிட்டல், ஆதித்யா பிர்லாவின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனர் திலீப் சங்வி, பாரதி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுனில் மிட்டல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்