Aran Sei

அதிகரித்து வரும் கொரோனா தொற்று: மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் அரசு கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது – ப.சிதம்பரம்

credits : the indian express

ந்திய அரசு, மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்குவதில் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது எனக் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் 35,871 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், 172 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் (2021)  ஒரே நாளில் கொரொனா தொற்றால் பாதிப்படைந்ததோர் எண்ணிக்கை (35,871) உச்சத்தை தொட்டதும் நேற்றைய தினம் தான்.

இந்தியாவில் இதுவரை, 1,14,74,605 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததாகவும், 1,10,63,025 பேர் மீண்டு வந்திருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர் சிகிச்சைப் பெற்று வருபவர் எண்ணிக்கை 2,53,364  எனவும் இதுவரை 3,71,43, 255 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

“பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்களே உருவாக்கிய பட்ஜெட்” – ப.சிதம்பரம் கடும் தாக்கு

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான  தடுப்பூசிகளை (5.9 கோடிகள்) வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த இந்தியாவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அதே வேளையில், இந்திய குடிமக்களுக்கு 3 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை, எண்ணி ஏமாற்றம் அடைகிறேன். இந்திய அரசு, மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்குவதில் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது” என்று ட்விட் செய்துள்ளார்.

”கொரோனா தொற்றினால் பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை யாரேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா? இந்த வேகத்தில் தொற்று பரவும் நிலையில், தடுப்பூசிகளைக் கொரோனா தொற்று வென்று விடும். மக்களின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும், தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதற்கான முன்பதிவுகள் போன்ற அதிகாரத்தடைகள் நீக்கப்பட வேண்டும்” எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்