Aran Sei

ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Image Credits: DNA India

ஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டது என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் – அமெரிக்க துணை பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

சிஎன்பிசி டிவி18 தொலைக்காட்சியின் கேள்விக்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், “நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஆரம்பித்து விட்டோம். தற்பொழுது மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நடைமுறை தொடரும்” என அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நலன் மற்றும் எரிசக்தி தேவைக்குத்தான் நான் முக்கியத்துவம் அளிப்பேன். கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைத்தால், அதை நாம் ஏன் வாங்கக் கூடாது?. மக்களுக்குத் தேவை இருக்கிறது. அதனால் நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்க ஆரம்பித்து விட்டோம்” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

ரஷ்யாவின் உள்ளூர் நாணயத்தில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும் சீனாவுடனான இந்தியாவின் எல்லை பிரச்சினையின்போது ரஷ்யா உதவாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்