இங்கிலாந்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் விஞ்ஞானிகள் உருமாற்றம் அடைந்த புதிய வகையா கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து கடந்த 28 நாட்களில் 35,928 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் எனவும் 326 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. முன்னர் இருந்த கொரோனா தொற்றை விட இந்தப் புதியவகை நோய்த்தொற்று 60 முதல் 70 சதவீதம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் புதியவகை கொரோனா – நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்
இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக், புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் வரை இங்கிலாந்தின் பல பகுதிகள் நான்காம் கட்ட (Tier-4) பொதுமுடக்கத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். தடுப்புமருந்து வரும் வரை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது மிக கடினம் என மேட் ஹேன்காக் ஸ்கை நியூசிடம் தெரிவித்துள்ளார்.
35,928 new positive cases, and 326 deaths within 28 days of a positive test, have been reported today across the UK.https://t.co/QriQqqkyse pic.twitter.com/QhJDH8O0X9
— Public Health England (@PHE_uk) December 20, 2020
இதையடுத்து அதிவேகமாகப் பரவி வரும் ”இந்தப் புதிய வகை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டுவதாக இருக்கிறது. இந்த நிலைமை மோசமான பின்பே சரியாகும். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நோய்த்தொற்றைப் பரவ விடாமல் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என இங்கிலாந்தின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்காக் தன் ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து மக்களிடம் வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
Today’s stark figures are very worrying.
This will get worse before it gets better – but it will get better.
We all need to do our bit to keep the virus under control while we accelerate the vaccination programmehttps://t.co/Js3uGtYulX
— Matt Hancock (@MattHancock) December 20, 2020
நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகள் இங்கிலாந்தில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளனர். இந்தியாவில் வருகின்ற புதன்கிழமையிலிருந்து இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என எண்டிடிவி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
Considering the prevailing situation in UK. Govt. of India has decided that all flights originating from UK to India to be suspended till 31st December 2020 (23.59 hours).
— MoCA_GoI (@MoCA_GoI) December 21, 2020
புதிய வகை கொரோனா நோய்த்தொற்று குறித்து இந்திய அரசு விழிப்போடு இருப்பதாகவும், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார் என எண்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகள் 5 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் இருந்த 266 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. அவர்களுடைய மாதிரிகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
உலகம் அடுத்த தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் : உலக சுகாதார நிறுவனம்
லண்டனில் இருந்து டெல்லி வழியாகச் சென்னை வந்த நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்தவர்களின் பட்டியலைத் தயாரிக்க இருப்பதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
‘கொரோனா தடுப்பூசி எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’ – ராஜஸ்தான் முதல்வர்
கடந்த 10 நாட்களில் லண்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார் என புதிய தலைமுறை பதிவிட்டுள்ளது.
இணையத்திலும் வலுக்கும் விவசாயிகள் போராட்டம் – புலம்பெயர் இந்தியர்கள் ஆதரவு
கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை இங்கிலாந்தில் ஏறக்குறைய 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 67,503 பேர் பலியாகியுள்ளதாகவும் ட்ரிபுயுன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. புதிய வகையிலான கொரோனா நோய்த்தொற்றுக் குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.