Aran Sei

இந்தியாவை இந்துராஜ்யம் என்று அறிவிக்காததற்கு நேருவே காரணம் – பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்

ந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்து நாடாக அறிவிக்கப்படாததற்கு கோழையான நேருவின் தலைமையே காரணம் என்று உத்தர பிரதேச மாநிலம் பல்லியா பகுதியைச் சார்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தடுப்பு மருந்து குறித்து பிரதமர் கூறிய உண்மைக்குப் புறம்பான தகவல்’ – தி இந்து ஆய்வில் அம்பலம்

மேலும், இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸின் “அசிங்கமான சிந்தனை” தான் காரணமென்றும், நேரு பிரதமராக இல்லையென்றால் இந்தியா இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சுரேந்திர சிங்,” இரண்டு நாடுகளும் இரண்டு கலாச்சாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடையும் போது இந்து நாடாக அறிவிக்கப்படாததற்கு கோழையான நேருவின் தலைமையே காரணம்” என்று கூறியதாக  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கும்பமேளாவிற்கும் இந்து மதத்திற்கும் அவப்பெயர் விளைவிக்கும் அரசியல் சதி நடக்கிறது’ – பாபா ராம்தேவ்

மேலும், நேருவின் இடத்தில் படேல் இருந்திருந்தால் இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருப்பார் என்றும் சுரேந்திர சிங் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 குறித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திக்விஜய் சிங் மீது தேசத்துரோக நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்று சுரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தி உள்ளாட்சி தேர்தல் – இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் இஸ்லாமியர் வெற்றி

மேலும், காங்கிரஸ் தலைவர் குறிப்பாக இந்திரா காந்தி, காஷ்மீரிலிருந்து பிராமணர்கள் வெளியேற்றப்படும்போது மௌனம் காத்தாகவும், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வெளிநாட்டு பண்பாடு மற்றும் இஸ்லாமியருக்கு ஆதரவாக அரசியல் செய்து வருவதாகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்