Aran Sei

இந்தியா: 2022 மார்ச் மாதம் 122 வருடங்களுக்கு பிறகு அதிக வெப்பத்தையும், 114 வருடங்களுக்கு பிறகு குறைவான மழைபொழிவையும் பதிவு செய்திருக்கிறது

ந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 மார்ச் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று(ஏப்ரல் 2)தெரிவித்துள்ளது.

மசூதிக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கியை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன் ஹனுமான் சாலிசாவை பாடுவோம் –  மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் 8.9 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது மார்ச் மாதத்தில் வழக்கமாகப் பொழியும் 30.4 மி.மீ அளவை விட 71 விழுக்காடு குறைவாகும்.

1909 இல் 7.2 மி.மீ மழைபொழிவையும்,1908 இல் 8.7 மி.மீ மழைபொழிவிற்குப் பிறகு 2022 மார்ச் மாதம் தான் 1901 ஆண்டிற்குப் பிறகு பதிவான மூன்றாவது குறைந்த மழைப்பொழிவாகும்.

“இந்தியா முழுவதும், 2022 மார்ச் மாதத்தில் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலை 33.10 டிகிரி செல்சியஸ் ஆகும். இது கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை ஆகும்” என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – ‘மகரிஷி சரக் ஷபத்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பரிந்துரை

2022 மார்ச் மாதத்திற்கு முன்னதாக 2010 மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 33.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதியாகியிருந்தது.

Source : economictimes

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்