Aran Sei

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

லங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

பிரிட்டன், கனடா, ஜெர்மனி, மலாவி, மாண்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளால் மார்ச் 12 ஆம் தேதி முன்மொழியப்பட்டட தீர்மானம்மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச் 23) நடைபெற்றது.

ஐநா மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினர்களாக 47 நாடுகளில் 21 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து தீர்மானம் வெற்றியடைந்துள்ளது.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது, அதிகார பகிர்வு தொடர்பான இலங்கை அரசின் உறுதிப்பாட்டை கோரும் வகையிலான திருத்தங்கள் தீர்மானத்தில் இறுதி வரைவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு சாத்தியமா? – தேர்தல் ஆணையம் ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவு

“இலங்கை அரசியல் சாசனத்தின் பதின்மூன்றாம் திருத்தத்தின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளும் சிறப்பாகச் செயல்பட உறுதி செய்ய வேண்டும்” என்று இலங்கை அரசுக்கு  வரைவுத் தீர்மானம் அழைப்பு விடுத்திருந்தது.

தீர்மானத்திற்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராக வாக்களித்திருந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்