Aran Sei

இணைய முடக்க நடவடிக்கைகளில் இந்தியா முதலிடம்- “டிஜிட்டல் அக்செஸ் நவ்” அறிக்கை

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய அரசு அதிகஅளவில் இணைய முடக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று “டிஜிட்டல் அக்செஸ் நவ்” (digital access now) என்ற அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலகளவில் நடந்த 155 இணைய முடக்க நடவடிக்கைகளில். இந்தியா 109 முறை இணையத்தை முடக்கியிருப்பதாகவும், தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக டெல்லி அந்தப் பட்டியலில் முதல் இடம்வகிக்கிறது என்றும், ஏமன் மற்றும் எத்தியோபியா முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கிறது.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இணையத்தை முடக்கியிருப்பது, 2018 மற்றும் 2019 ஆண்டுகளைவிட, கடந்த ஆண்டு குறைந்துள்ளது என்றாலும், இந்தியா அந்தப் பட்டியலில் முதலிடம் வகித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலிருந்து, நிரந்தரமான தண்டனையாக இணையமுடக்கம் மாறியதாகவும், அந்தப் பகுதி மக்கள் அடிக்கடி இது போன்ற இணைய முடக்கத்தை அனுபவித்திருந்தாலும், 2020 ஆம் ஆண்டில்  மக்கள் இணையத்தையே பயன்படுத்த இயலாத வகையில் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது என்றும் டிஜிட்டல் அக்செஸ் நவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசுக்கு அடிபணிந்த ட்விட்டர் நிறுவனம் – 500 க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

அக்செஸ் நவ் அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 28 முழுமையான தொலைத்தொடர்பு மற்றும் இணைய முடக்கத்தால் மக்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகி இருக்கிறார்கள் எனவும், உலகெங்கிலும் நடைபெறும் இணைய முடக்கத்தில் நான்கில் ஒன்று அதிகபட்சமாக இரண்டு வாரங்கள்வரை நீடிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த முடக்கத்தால், 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

மேலும், உலகளவில் 27,165 மணிநேரம் இணைய முடக்கம் நடந்திருப்பதாகவும், இது 2019 ஆம் ஆண்டைவிட 2020 ஆம் ஆண்டில் 49% அதிகம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில காரணங்களுக்காகவே இணைய முடக்கம் நடைபெறுகிறது என்பதால், கிராமப்புற (அ) குறிப்பிட்ட நகரத்தைச் சார்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஆனால் இந்த அறிக்கை அதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான இணைய முடக்கங்களை மட்டுமே கவனம் செலுத்த இயன்றது என்றும், ஒருவேளை அதையும் கணக்கிட்டால் இணைய முடக்கதிற்காக அரசுகளால் செலவிடப்பட்ட தொகை, 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகமாக இருக்கும் என்றும் ‘டிஜிட்டல் அக்செஸ் நவ்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்